நிலா என்றுமே வெண்ணிலா தான்
காதல் பார்வை வீசினான்
அவள் கண்டுகொள்ளவில்லை
கடும் அமிலத்தை வீசினான்
கண்டுகொண்டாள்
அவன் கயவன் என்று...
நிலவில் களங்கம் உள்ளதால்
களங்கமான நிலா என்றாகிவிடுமா?
அது என்றுமே வெண்ணிலா தான்..
அவள் முகத்தில் களங்கம் உள்ளதால்
அவள் களங்கமான பெண் ஆகிவிடுவாளா?
அவள் என்றுமே தேவதை தான்...
அந்த வானில் உள்ள வெண்ணிலவையும்
இந்த மண்ணில் உள்ள பெண்ணிலவையும்
சமமாக எண்ணி
காதல் கொள்ள ஒருவன்
வராமலா போய்விடுவான்???