காவிரியாக நீ காய்ந்த நிலமாக நான்

காவிரிப்பெண்ணே...
காதல் கொடு என்றால்
கண்ணீர் கொடுத்து விட்டாயே..
கவிதைக் கொடு என்றால்
அம்பைத் தொடுத்து விட்டாயே..
மழையாய் அன்பை பொழி என்றேன்
யார் நீ எங்கோ ஒழி என்கிறாயே..
காதல் சொல்ல வந்தவனுக்கு
காயம் நூறு தந்துவிட்டாய்..
அந்தக் காயம் தரும் வலி தாங்கி
கவிதைக் கண்ணீர் சிந்திவிட்டேன்....