காதல் பற்றிய சிறப்பு தொகுப்பு

மவுனம் பேசாதீர்கள்!!!

கோபம், சண்டை வரும்போது ஆவேசமாக கத்தி கூப்பாடு போடும் தம்பதியர், அதிவிரைவில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொஞ்சுவதும், பிடிக்காத காரணத்தால் பேசாமல் இருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர நாட்களாவதும் கண் கூடாக நாம் பார்க்கும் உண்மை.

ஏனென்றால், மவுனம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதனை முறையான சரியான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் மவுனமானது பெரும் ஆபத்தாகும்.

ஏனென்றால் மவுனமாக இருக்கும்போது, மூளையில் சாத்தான் வந்து அமர்ந்து கொள்ளும் காதலிக்கும் போது நடந்த விஷயங்கள் எல்லாம் நாடகமாகவும், இப்போது இருப்பதுதான் நிஜம் என்றும் எடுத்துக்காட்டும். மேலும் இதுவரை என்னென்ன குறைகள் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கிறது என்று கெட்ட விஷயங்கள் மட்டுமே மனதில் திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கும்.

மேலும் இருவரும் மவுனமாக இருப்பதால் யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்பதில் ஈகோ வளர்ந்து வெட்ட முடியாத பெரிய மரமாக மாறிவிடும்.

முதலில் அவர்தான் பேசவேண்டுமென இவரும், இவர்தான் பேசவேண்டுமென அவரும் கொஞ்ச நாள் காத்திருப்பார்கள். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைமைக்குப் போய்விடுவார்கள். அதற்குப்பின் சமாதானம் என்பது மிகவும் கஷ்டப்பட்டு அடைய வேண்டிய விஷயமாகிவிடும்.

அதனால் ஏதாவது பிரச்சனை
என்றால் திட்டுங்கள், சண்டை போடுங்கள், கட்டிப் பிடித்து உருளுங்கள், ஆனால் பேசாமல் மட்டுமே இருக்கவே இருக்காதீர்கள். பேசுங்கள், நிறைய பேசிக்கொண்டே இருங்கள்.

வர வர காதல் கசக்குதையா......!






இப்போதெலாம் காதல் திருமணம் என்பது ஃபாஷனாகி விட்டது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தோழமை, புரிதல் மற்றும் நெருக்கம் அதிகரித்திருப்பதால் பெரும்பாலான காதல் திருமணங்கள் இருவீட்டாரின் சம்மதத்துடனும், ஆசீர்வாதத்துடனும் நடக்கிறது.

இது ஒரு புறமிருக்க இன்று பலரின் காதலுக்கு வில்லன்களே கிடையாது, இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்றாலும் வில்லனை எதிர்த்து காதலி கையை பிடிக்கும் சுவாரஸ்யமே தனி தான்.

முன்பெல்லாம் காதல் வயப்பட்டதும் அதை காதலியிடம் தெரிவிப்பதற்கு தனி தைரியம் வேண்டும். இப்பது நிலைமை அதற்கு எதிர்மறையாக உள்ளது. காதலன் காதலியிடம் காதலை சொல்ல மொபைல், மெயில், பேஸ்புக், சாட்டிங் என தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கைகொடுக்கின்றன.

எதுவும் ஈசியாக கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பதை போல, ஒருவரின் வாழ்வில் " காதல்" என்னும் அத்தியாயம் இருந்தது என்பதை அவர் உணர்வதற்குள் அது காணாமல் போய்விடுகிறது. இது ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் பொருந்தும்

காதலி காதலுக்கு உடனே ஓகே சொல்லிவிட்டாள், இருவருக்கும் கை நிறைய சம்பளம், பெற்றோருக்கு சம்மதம், கல்யாண வயது முடியும் தருவாய் என பலவற்றையும் காரணம் காட்டி அன்பு காதலியை அவசர மனைவியாக மாற்றிவிடுகிறார்கள்.

இவ்வாறு கைபிடிக்கும் காதலர்கள் திருமண நாள் முதல் வேறு விதமான நிதர்சன உண்மைகளை சந்திக்க நேரிடுகிறது. காதலிக்கும் வரை அன்பாகவும் பாசமாகவும் பழகிய காதலி/காதலன், திருமணதிற்கு பின் காலை முதல் மாலை வரை கோபத்தின் உச்சியில் இருப்பதுபோல தோன்றும்.

இதுவே நாளடைவில் கருத்து வேறுபாடு, சண்டை, தவறாக புரிந்துகொள்ளுதல், ஈகோ, வெறுப்பு என படிப்படியாக அதிகமாகி கடைசியில் விவாகரத்து, நிரந்தரமான பிரிவு என்னும் அளவிற்கு கொண்டுபோய் விட்டுவிடும்.

காதலிக்கும்போது உருகி உருகி காதலித்த துணையின் முகத்தை பார்க்ககூட பிடிக்காமல் போய்விடும். இதனால் இவர்கள் மட்டுமின்றி இருவரின் குடும்பத்தினரும் பாதிக்கபடுவார்கள்.

விவாகரத்து தான் சரியான தீர்வு என்னும் அளவுக்கு காதல் கசிந்து விடாமல் பார்த்துகொள்வது காதல் திருமணம் புரிந்தவர்களின் தலையாய கடமை.

திருமணத்தின் முதல் நாளிலிருந்து வாழ்கையின் இறுதிநாள் வரை அன்பு, அக்கறை, பணிவு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து வாழ்தல் போன்ற நற்குணங்களை பின்பற்றினாலே "காதல் திருமண வாழ்க்கை" சொர்க்கமாகும்.



காதலுக்கு உயிரூட்டும் எளிய டிப்ஸ்!













காதலர் தினத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், ஆண்கள் தங்கள் காதலியையும், பெண்கள் தங்கள் காதலனையும் கவர என்னென்ன செய்யலாம் என்று இப்போதே யோசிக்க ஆரம்பித்திருப்பீர்கள்.

காதலில் விழுந்த இளசுகளுக்கு இந்த யோசனை என்றால், நமக்கு எப்போது காதல் கதவை தட்டும் என எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இந்த வருடமும் காதலர் தினத்தில் தனியே இருக்ககூடாது என்ற கவலை. இந்த வருடம் கண்டிப்பாக ஒரு துணையை கண்டுபிடிக்க வேண்டுமென்ற வைராக்கியத்தோடு ஷாப்பிங் மால்கள், தீம் பார்க்குகள், தியேட்டர்கள், கோவில்கள், பீச், பார்க், தெரு‌க்க‌‌ள் போன்ற பல இடங்களில் இளசுகளின் கூட்டம் அலைமோதும்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல், காதலில் விழுந்தவனுக்கு தான் அதிலிருக்கும் கஷ்டங்கள் தெரியும்.

காதலில் சிக்கிவிட்டால் ஒருவனின் நடை, உடை, பாவனை, குணம் என எல்லாமே ஒரு மாற்றத்திற்கு உள்ளாகும். இது அவனின் காதலியின் மனம்கவர அவன் எடுக்கும் முயற்சி. இதில் எந்த தவறும் இல்லை, ஆனால் காதல் வந்த புதிதில், காதலிக்காக எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு சில நாட்கள் கழிந்ததும் இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் அதுவே விபரீதம் ஆகிவிடும்.

காதலர்களுக்குள் என்னதான் புரிதல் இருந்தாலும், அவ்வபோது சிறு ஆச்சிரியங்களும், பரிசு பொருட்களும் அந்த உறவிற்கு நீண்ட நாட்கள் உயிரூட்டும்.

அவ்வகையில், காதலில் விழுந்திருக்கும் புதிய ஜோடிகளும், காதல் கசிந்துவிட்டதா என யோசிக்கும் பழைய ஜோடிகளும், தனிமையில் வாடியது போதுமென்று தங்களின் காதலை தேடி அலைபவர்களும் தெரிந்து கொள்ளவேண்டிய சுவாரஸ்யமான லவ் டிப்ஸ் இதோ..

காதலருக்கு சிறிய பரிசு கொடுத்தாலும், புதுமையான முறையில் கொடுங்கள். உதாரணத்திற்கு ஒரு பூச்செண்டில் 12 ரோஜாக்கள் இருந்தால், அதில் 11 சிவப்பு ரோஜாக்கள் மற்றும் ஒரேயொரு வெள்ளை ரோஜாவை வைத்து கொடுத்து, அந்த வெள்ளை ரோஜாவை போல் நீ தனித்துவம் மிகுந்தவர் என கூறுங்கள்.

காதாலருக்கு பிறந்தநாள் என்றால், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பும்போது, காதலரின் பெற்றோருக்கு "நன்றி" என்று எழுதி ஒரு பூச்செண்டை அனுப்புங்கள்.

அவ்வபோது எதிர்பாராத ஆச்ச‌ரியங்கள் கொடுத்து உங்கள் துணையை திக்குமுக்காட வையுங்கள்.

முயன்றவரை ஒன்றாக நேரம் செலவழிக்க பாருங்கள். யோகா, நடை பயிற்சி, உடல் பயிற்சி ஆகிவற்றை இருவரும் ஒன்றாக செய்து பழகுங்கள்.

உங்களின் துணையை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய‌த் தயங்காதீர்கள்.

ஒரு விஷயத்தை பற்றி முடிவு செய்யும் முன் உங்களின் காதலரின் எண்ணம் என்னவென்று தெரிந்துகொண்டு செயல்படுங்கள்.

கையை பிடித்து கொள்ளுதல், தோலில் சாய்தல், செல்லமாக அடித்தல் போன்ற செய்கைகள் காதலில் மிக முக்கியமானவை என்பதை மறவாதீர்கள்.

எவ்வளவு பிசியாக இருந்தாலும் காதலுக்காக நேரம் ஒதுக்குங்கள்.

வருங்காலத்தை பற்றி இருவரும் சேர்ந்தே முடிவு செய்யுங்கள்.

ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து, மற்றவரின் எண்ணத்தை மதித்து, அன்பை பகிர்ந்து கொண்டால் இன்றைய காதலர்கள், காலம் முடியும் வரையிலும் காதலர்கள் தான்.





பெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்!




இளைய தலைமுறையினருக்கு காதல் வந்துவிட்டால் அவர்கள் மற்றவர்களை பற்றி கவலை கொள்வதே இல்லை. தன் வீட்டில் என்ன நடக்கிறது, பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என எதை பற்றியும் சிந்திக்க இன்றைய அவசரக்கார காதலர்களுக்கு நேரம் இல்லை.

கண்டவுடன் காதல், பேஸ் புக்கில் காதல், இன்டர்நெட்டில் காதல், மொபைல் போனில் காதல் என இன்றைக்கு காதல் பல பரிமாணங்களை கொண்டுள்ளது. துளிர்த்த காதல் கசிந்து போவதற்கு முன் திருமணம் செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் இன்று பெரும்பான்மையான ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருக்கிறது.

ஆண், பெண் இருவரும் பொருளாதாரத்தில் பெற்றோரை சாராமல் இருந்துவிட்டால் அவர்களின் சம்மதத்தை கூட கேட்காமல் அவசரமாக நான்கு நண்பர்கள் முன்னிலையில் ஆயிரம் காலத்து பயிரினை நடத்து வங்குகிறார்கள்.

உங்கள் காதல் உண்மையாக இருந்து இல்லற வாழ்க்கை சந்தோஷமாக இருந்தால் பிரச்சனை இல்லை.அதுவே வயதால் ஏற்படும் சலனத்தால் காதலித்து அது திருமணத்தில் முடிந்து இல்லற வாழ்வில் பிரச்சனை வரும்போதுதான் பெற்றோரின் நினைவு வரும்.

காலம் கடந்த பிறகு இதையெல்லாம் யோசித்து சங்கடபடுவதை விட காதலிக்கும்போதே அதை பெற்றோரிடம் தெரிவித்து அவர்களின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்வது நல்லது.உங்கள் காதல் நிலைப்புத்தன்மை இல்லாமல் இருந்தால் அதை பெற்றோர்கள் சுலபமாக கண்டுபிடித்து விடுவர்.

இவை எல்லாவற்றையும் விட இருவீட்டாரின் சம்மதத்துடனும் ஆசீர்வாதத்துடனும் நடக்கும் திருமணம் நீடித்து நிலைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.

உங்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க சில முறைகளை கையாளலாம். அவற்றில் சில,

1. பெற்றோருக்கு சிறிது நேரம் கொடுங்கள்.
2. அவர்கள் உங்கள் காதலரை வெறுக்கும் காரணத்தை கண்டறியுங்கள்.
3. உங்கள் காதலரிடம் இதைபற்றி பேசாதீர்கள்.
4. உங்கள் குடும்பத்தினரிடம் மனம்விட்டு பேசுங்கள்.
5. அவர்களின் இடத்திலிருந்து யோசியுங்கள்.
6. உங்கள் விருப்பத்தையும், உணர்வுகளையும் பெற்றோருக்கு புரியவைக்க முயலுங்கள்.
7. பெற்றோரை வெறுத்துவிடாதீர்கள்.
8. பொறுமையாக இருந்து உங்கள் காதலை நிரூபியுங்கள்.
9. அவர்களின் விருப்பபடி உங்கள் காதலரின் நடவடிக்கைகளை மாற்றமுடியுமா என்று பாருங்கள்.
10. உங்களது பெற்றோர் உங்களுக்கு முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

சில நேரங்களில் இவை அனைத்தும் உபயோகப்படாமல் போகலாம். பெற்றோர்கள் வறட்டு கெளரவம், அந்தஸ்து போன்ற காரணங்களுக்காக உங்கள் காதலை எதிர்க்கும்போது, உங்கள் காதலின் மீது கலைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் நன்கு சிந்தித்து உங்களின் வாழ்வை தேர்தெடுங்கள்.



காதலில் செக்சுக்குத் தடை!!!













செக்ஸ் என்பது சந்தோஷமான ஓர் அனுபவம் என்றாலும், காதலில் அது நுழையாமல் இருப்பதுதான் நல்லது என்பது காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

ஆண்களது செக்ஸ் ஆர்வமும், பெண்களது செக்ஸ் ஆர்வமும் மிக வித்தியாசமானது.

தேவையான அளவு செக்ஸ் அனுபவித்ததும் அதைவிட சிறப்பாக வேறு பெண்ணிடம் செக்ஸ் கிடைக்கும் என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் இயல்பாகவே ஒரே ஒருவரிடம் மட்டுமே உறவு கொள்ள விரும்புவார்கள்.

காதலித்த பெண்ணிடம் உறவு அனுபவித்தலும், அட இவ்வளவுதானா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் காதல் காணாமல் போய்விடும். காதலுக்கு முன் செக்ஸ் வைத்துக்கொண்டால் என்ன தப்பு என்பவர்கள் கீழ்க்கண்ட பதில்களைப் பார்த்த பின்னர் முடிவு செய்து கொள்ளுங்கள்.

பெண், ஆண் இருவருக்குமே திருமணம் வரையில் கூட கற்பை காப்பாற்ற முடியவில்லையே என்ற தன்னிரக்கம் ஏற்பட்டுவிடும்.

ஓதோ ஒரு மிகப்பெரிய குற்றம் செய்ததாக மனம் உறுத்திக்கொண்டே இருக்கும்.

ஆண் பெண் இருவருக்கும் பிளாக்மெயில் செய்வதற்கு இந்த சம்பவம் வழிவகுத்துவிடும்.

அடிக்கடி தவறு செய்யத் தூண்டும்.

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் தேவையில்லாத கர்ப்பம் ஏற்பட்டு அதனால் பெரும் பிரச்சனைகள் உண்டாகலாம்.

எப்போதுமே கிடைக்காத பொருள் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருக்கும். காதலில் செக்ஸ் கிடைத்துவிட்டால் அதற்குப்பின், அங்கு எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது. பெரும் ஆர்வமும் இருக்காது.



பெண் யார் கேட்டாலும் உறவுக்க சம்மதிப்பவராக இருப்பார் என்ற எண்ணம் ஆணுக்கு வந்துவிடும்.

திருமணம் முடித்த பின்னர் அவர்களுக்குள் புதிதாக ஒன்றுமில்லை என்பதால் அதற்காக அவசரப்படுதல் நின்றுபோய்விடும். பெண் அதற்குப் பின் அதிகமாக அவசரப்படுபவளாகவும், ஆண் நழுவுபவனாகவும் இருப்பான்.

காதலர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வருவது சகஜம்தான். அப்படிப்பட்ட நேரத்தில் செக்ஸ¤க்கு சம்மதித்தது பற்றி கேவலமாக பேசப்பட்டுவிட்டால் காதல் முறிந்துபோய்விடும்.

செக்ஸ் உறவு முழுமையானதாக இல்லாத பட்சத்தில் இருவருக்கும் பிறர் மீது சந்தேகம் வந்துவிடும். செக்ஸ் திருப்தி தர முடியாத இவருடன் எப்படி வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றும்.

மீண்டும் ஒருமுறை சம்மதிக்காவிட்டால், புதுசா என்ன என்பது போன்ற பேச்சுக்கள் வந்துவிட்டால் காதலில் மரியாதையும், அன்பும் காணாமல் போய்விடும்.

இருவருக்குள்ளும் செக்ஸ் உறவு இருக்கிறது என்பது பிறருக்குத் தெரிந்தால் அவர்களை காதலர்கள் என்று பார்க்காமல் செக்ஸ் உறவுக்காக அலைபவர்கள் என்று தவறுதலாகவே பேசுவார்கள்.

ஆண், பெண் இருவரிடமும் ஒரு அவநம்பிக்கை வந்துவிடும். எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். தேவையில்லாமல் அவசரப்பட்டுவிட்டோமே என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கும்.

ஒருவேளை காதலரை கைப்பிடிக்க முடியாமல் போய்விட்டால், வேறொருவரை திருமணம் செய்துகொண்டு அவருக்கு கற்பினை காணிக்கையாகத் தரமுடியாமல், ஓர் எச்சில் பண்டமாக தன்னுடைய உடலை கருத வேண்டிவரும்.



ஆணுடனான உறவில் ஏமாற்றமடைதல்


பெண் ஒரு வெற்றியாளனை, ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல், அரவணைப்பும், நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும்.

பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ, இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில், செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான்.

ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள்.

பல அண்கள் வெளியில் செல்வாக்குடன் உள்ளனரே தவிர, வீட்டில் மனைவியுடன் மனம்விட்டுப் பேசவேண்டும், பழகவேண்டும், காதலைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

98 விழுக்காடு பெண்கள், தங்கள் மீதுள்ள காதலை கணவன் அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களைப் பற்றி, தங்கள் உணர்வுகளைப் பற்றி தங்களுடைய திட்டங்களைப் பற்றி அதிகமாக பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறெல்லாம் நடக்காதபோது 40 விழுக்காடு பெண்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். 42 விழுக்காடு பேர் வேறொரு உறவை நாடுகிறார்கள். அந்த உறவு இன்னொரு ஆணுடனாக இருக்கலாம், தனது குழந்தையின் மீது கவனம் செலுத்துவதாக அல்லது வேலையின் மீது கவனத்தைத் திருப்புவதாக இருக்கலாம்.

வெளியுலகத்தை சாராமல் வீட்டுச் சூழலில் அதிகம் இருக்கும் பெண் தனது உணர்வுகளை கணவன் தூண்ட வேண்டும் என எதிர்பார்க்கிறாள். அதற்குப் போதிய அவகாசம் அளிக்கிறாள்.

இதைப் புரிந்துகொண்டு மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவதை கணவன் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே நெருக்கமிராது, மனைவியின் மனம் அன்பிற்காக ஏங்கத் தொடங்கும். அந்த ஏக்கம் தேவையற்ற விளைவுகளைத் தரக்கூடும்.



அறியாப்பருவக் காதல்!!!






இது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப்பருவக் காதல் எனப்படுகிறது. இந்த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார்கள். மனசுக்குப் பிடித்தவர்கள் என்று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என்பதை உயிரினும் மேலாக நினைப்பார்கள். ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும்.

அதாவது இன்று தான் பார்க்கும் ஓர் அழகி அல்லது அழகனைவிட சிறப்பாக இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், காதல் அப்படியே அவர் பின் ஓடிவிடும் அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு அடுத்தக் காதலில் இறங்கிவிடுவார்கள்.

தன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்திற்கும் உருவம் கொடுக்க நினைப்பார்கள். தன்னிடம் என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எதிரே இருப்பவரின் தகுதியினை மட்டுமே பார்ப்பார்கள்.

தனக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர், ஆசிரியை, சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு விரர்கள் என காதலிக்கும் நபர்கள் இயல்பு வாழ்க்கையில் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நபர்களை மற்ற பிரிவில் சேர்க்காமல், மிக எளிதான வாழ்வினை சமாளிக்க முடியாதவர்கள் என்ற பிரிவில் அறிவியலாளர்கள் சேர்த்துவிடுகிறார்கள்.

காதலை அல்லது காதலனை வாழவைப்பதற்கு அடிப்படைத் தேவையான வருமானம், மன உறுதி, உடல் உறுதி போன்றவை இல்லாதவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள்.

பணம் சம்பாதிக்காதவர்களுக்கு காதல் வரக்கூடாதா எனக் கேட்கலாம். காதல் வருவதற்கு வருமானம் தடையாக இருக்காது.

ஆனால் நாம் காதலில் வெற்றி பெறுவதைப் பற்றியும், திருமணம் முடிப்பது பற்றியும், அதற்குப் பின்னரும் வாழ்நாள் முழுவதும் காதல் தொடர்வதற்கான வழி சொல்லிக் கொண்டிருப்பதால், வருமானம் இல்லாதவர்கள் காதலின் அடுத்தக் கட்டத்தை தொடமுடியாது என்பதுதான் நிஜம்.

எப்படி ஒரு டீன் ஏஜ் வயதில் திருமனம் என்பது ஏற்றுக்கொள்ளப்படாதது என்பதில் சமூகம் உறுதியாக இருக்கிறதோ, அப்படியே காதலில் விழுந்த ஆண் அல்லது பெண்ணிடம் வாழ்வதற்கு ஆதாரத் தேவையான வருமானம் இல்லாத பொழுது, அந்தக் காதலும் ஏற்றுக்கெள்ளப்படாது.

வருமானம் இல்லாதவர்களும் டீன் ஏஜ் வயதினரும் காதல் செய்ய முழுத் தகுதி பெற்றவர்கள். காதல் செய்ய தகுதி படைத்தவர்கள் எனும் பொழுது காதலிக்கப்படவும் இவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வெற்றி?

டீன் ஏஜ் வயதில் காதல் என்பதை சட்டமும், சமூகமும் ஏற்றுக்கொள்ளாது.

அதேபோல் வருமானம் இல்லாதபட்சத்தில் காதலின் அடுத்தக்கட்டத்தை தொட சம்பந்தப்பட்டக் காதலர்களே விரும்பமாட்டார்கள். அதனால் டீன் ஏஜ் காதலர்கள் எல்லாம் இந்த அத்தியாயத்தோடு ஜோராக கைதட்டி விடைபெறலாம். இதுவரை வருமானம் இல்லை என்றாலும், வருமானத்திற்கு தீவிர முயற்சி எடுக்கும் காதலர்கள் தவிர, மற்றவர்களும் வெளியேறிவிடலாம்.



புதுசுக்கு வலை வீசு!!!






காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் இருக்க முடியுமா?

எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே.

மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.

காதல் தோல்விக்காக சிலர் தற்கொலை செய்கிறார்களே என்ன செய்வது?

இவ்வுலக வாழ்வு என்பது ஓர் இனிய வரம். இந்த அழகான பூமி, அழகான மாந்தர், அற்புத வாழ்க்கை எல்லாம் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. இதனை முழுவதுமாய் அனுபவித்து வாழவேண்டும்.

சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல். காதல் இல்லை என்றதும் உலக வாழ்வே வேஸ்ட் என தன்னைத்தானே அழித்துக்கொள்பவர்கள் மடையர்கள், முட்டாள்கள்.

வேறு என்ன சொல்வது? வாழ்வை ரசிக்கத் தெரியாததால் அவர்களால் காதலையும் ரசித்து ஜெயிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள்.

ஆனால் காதலில் தோற்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறப்பதே இல்லை. மனதிற்குள் ஒரு தாஜ்மகால் கட்டி அங்கே தோற்கப்பட்ட காதலை பூஜித்து வருவார்கள்.

ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் சுகமான அனுபவமே. நீங்கள் விரும்பிய ஒரு நபர் கிடைத்துவிட்டால் அவர் மீதிருந்த ஆசை, ஆர்வம், அன்பு எல்லாமே குறைந்துபோய்விடலாம்.

உங்களுக்குத் தெரியாமல் அவரிடம் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் மனதில் பரிசுத்தமாக இருக்கக்கூடியது காதல் தோல்வி.

காதலில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்குவது என சிலர் கேட்பார்கள். காதல் என்பது சுவாசம் மாரிரி, ஒரு நொடியும் சும்மா இருக்கக்கூடாது. அதனால் ஒரு காதல் முடிந்துவிட்டால், உடனடியாக அடுத்த காதலை தொடரலாம். அல்லது உங்கள் மனம் சமாதானமான பின் தொடரலாம்.



ஏடாகூட காதல்!!!






இப்படியெல்லாமா காதல் என்பது இருக்கும் என்று பலர் அதிசயிப்பார்கள்.

ஆணும் ஆணும் காதலிப்பது, பெண்ணும் பெண்ணும் காதலிப்பது என்பதெல்லாம் ஏதோ ஒரு புரட்சி என்று தோன்றுமே தவிர, இது காதல் கிடையாது. உடலில் ஜீன்கள் செய்யும் சேட்டை அவ்வளவுதான்.

இதுபோலவே தவறான உறவு முறைகளுக்குள் உண்டாகும் காதலும் ஏடாகூடக் காதலே. அண்ணன் உறவு முறை, தகப்பன் மகள் உறவு முறை போன்றவற்றில் காதல் ஏற்பட்டுவிட்டது என்பதை சமூகம் ஒப்புக்கொள்ளாது.

உண்மையில் என் சகோதரரை காதலிக்கிறேன் என்பது சம்பந்தப்பட்டப் பெண்ணைப் பொறுத்தவரை அக்மார்க் நிஜமாகவே இருக்கலாம். ஆனால், அதற்கான இதனை காதல் எனும் வரிசையில் சேர்ப்பித்துவிட முடியாது.

பலரது ஏச்சுக்கும், பேச்சுக்கும், கேலி கிண்டலுக்கும் ஆளாகும் உறவு முறைகளைக் காதல் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இப்படிப்பட்ட காதலில் இருந்தும் வெளியேறுவதுதான் நல்லது.

உண்மைக் காதல் என இதனைக் கடைசி வரை கடைப்பிடிக்க நினைத்தால் கண்டிப்பாக பிற்காலத்தில் முன்னர் செய்த காதலுக்காக வருத்தப்பட வேண்டியிருக்கும்.

திருமணக் காதலர்கள்!

குறிப்பாக நம் நாட்டைப் பொறுத்தவரை மிக அதிகமான திருமணம் என்பது பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் திருமணமாகும்.

திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழையும் வரை ஒருவரை ஒருவர் முழுசாக பார்த்து கூட இருக்கமாட்டார்கள். ஒரு வார்த்தை கூட பேசியிருக்க வாய்ப்பிருக்காது. ஆனால் காலத்தின் கட்டாயமாக வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ வேண்டிய ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

உறவுகளுக்காகவும், சமுதாயத்தின் கட்டாயத்திற்காகவும் சேர்ந்து வாழும் பெரும்பாலான தம்பதியர்கள் கடமைக்காக கணவன்-மனைவியாக வாழ்கின்றனர். இதில் காதல் என்பது அபூர்வமாக ஒரு சிலரிடமே பூக்கிறது.

கணவன்-மனைவி இருவரும் காதலர்களாக கடைசி வரை சந்தோஷமாக வாழமுடியும் என்ற உண்மை நிறைய பேருக்குத் தெரிவதில்லை. ஓர் ஆணால் இன்னொரு பெண்ணைத் தேர்வு செய்ய முடியாது என்பதும், அந்தப் பெண் வேறு வழியின்றி கணவனாக வந்திருக்கும் ஆணை மட்டுமே காதலிக்க வேண்டும் என்ற கட்டாயம் தவிர, மற்ற எல்லா விஷயங்களும் காதலர்களைப் போலவே இவர்களுக்கும் பொருந்தவே செய்யும்.




செயற்கை அழகு வேண்டாம்!!!
பார்வை நிலை முடிந்து இயல்பாக பேசும் நிலையில் இருப்பதையே நிறைய பேர் காதல் என எண்ணிக் கொள்கிறார்கள். அதன்பிறகு அதிகப் பிரசங்கித் தனமாக ஏதாவது செய்யும் போதுதான் ஏடாகூடமாகிவிடுகிறது.

முதலில் ஆண்கள் பெண்களை எப்படி கவர்வது என்று பார்ப்போம்.

பார்வை நிலையில் வெற்றி அடைந்தாகிவிட்ட நிலையில் இனி புற அழகிற்கு என அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.

இந்த நிலையில் ஒரு சிலர் கதாநாயகன் மாதிரி தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும் என நினைத்து நடை, உடை, பாவனைகளை மாற்றுவார்கள். இதனை பெண்கள் எவரும் விரும்புவதில்லை என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் எடுத்துச் சொல்லியிருக்கின்றன.

தான் விரும்பும் நபர் ஓர் இடத்திற்குச் செல்லும்போது, அவரை பல்வேறு பெண்கள் ஆசையாக, ஆர்வமாக பார்ப்பது பொறாமையைத் தூண்டுவதுடன் எரிச்சலையும் கொடுத்துவிடும். அதனால் இயல்பாகவே இருங்கள்.

உங்கள் புறத்தோற்றம் பிடித்துப்போன பிறகு பேச்சு நிலைக்கு வந்திருக்கிறீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

அதனால் அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இனி கிடையாது. அதற்காக இத்தனை மிடுக்காக செய்துவந்த உடை அலங்காரம், உடல் தூய்மை என அனைத்தையும் விட்டுவிடலாம் என அர்த்தம் இல்லை.

தன்னிடம் ஓர் ஆண் பேசும்பொழுது வேறு எந்த தொந்தரவும் வருவதை பெண் விரும்பமாட்டாள். அதேநேரம் அவளது கண்களுக்கு நீங்கள் மிக அழகாகவே தெரிவீர்கள்.

இதற்கு ஓர் அழகான உதாரணம் சொல்லலாம்.

சுதா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எத்தனையோ அழகான பையன்கள் அவளுடன் பேசுவதற்கு போட்டி போட்டார்கள். அவள் அனைவரையும் ஒரு புன்னகையுடன் ஒதுக்கிவிட்டாள்.

வழக்கமாய் அவள் வந்து செல்லும் பஸ்ஸில் கண்டக்டர் மிகவும் சுறுசுறுப்பாக, நாகரீகமாக பழகுவது அவளைக் கவர்ந்து இழுத்தது. அவர் அதிகமாகப் படிக்காதவர், மிகவும் கருப்பான நிறம் கொண்டவர். சுதாவை விட தாழ்ந்த ஜாதி என எதுவுமே அவளை பாதிக்கவே இல்லை.

சுதாவே அவளது காதலை அவனிடம் சொன்னாள். இன்று அவர்கள் இருவரும் ஒரு வெற்றிகரமான தம்பதியராக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த சுதாவைப் போன்றுதான் கிட்டத்தட்ட எல்லா பெண்களும் தனது காதலன் நல்லவனாக, வல்லவனாக, நகாரீகமானவனாக, உழைக்கக் கூடியவனாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் அதிக முன்னுரிமை கொடுக்கிறார்களே தவிர, அழகுக்கு அல்ல.

சினிமா நட்சத்திரங்களைப் போன்று தலை அலங்காரம், உடை அலங்காரம் செய்வது எல்லாம் நகைச்சுவையாகவே தெரியுமே தவிர, மனதினைக் கவராது. அதனால் முதலில் எப்படி இருந்தீர்களோ அப்படியே எப்போதும் இயல்பாக இருங்கள். தேவையின்றி நீங்களும் குழம்பி, பெண்களையும் குழப்பாதீர்கள்.



உஷார் ஆணே உஷார்...
காதலில் ஆண்கள்தான் மோசமாக நடப்பார்கள் என்று எண்ண வேண்டாம். பெண்களிலும் அப்படிப்பட்டவர்கள் உண்டு. அதனால் எப்படிப்பட்ட பெண்களைக் கண்டதும் விலகுவது நல்லது என்பதைப் பார்க்கலாம்.

பணத்திற்காக எதையும் செய்பவள் எனத் தெரியவந்தால்.

உடல் ரீதியான தொடர்பு பல ஆண்களிடம் காதலுக்குப் பின்னரும் இருக்கிறது என அறிந்தால்...

பரிசுப் பொருளை பெறுவதற்காக சந்தித்து, பொருள் வாங்கியதும் விலகி ஓடுபவராக இருந்தால்...

நான் மட்டும் இல்லையென்றால், உங்களால் ஒண்ணும் செய்ய முடியாது என ஆணை மட்டம் தட்டுபவளாக இருந்தால்...

ஆண் தனது குடும்பத்தைப் பற்றி முழுமையாக சொன்ன பின்னரும், பெண் அவளது குடும்பத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தால்...

சில ஆண்களுடன் செக்ஸ் ரீதியாக தொடர்பு வைத்திருப்பவர் என அறிய நேர்ந்தால்...

எதற்கெடுத்தாலும் ஆணை குறை சொல்பவளாக, வேலை ஏவுபவளாக இருந்தால்...

திருமணம் பற்றிய பேச்சை எடுத்ததும் தட்டிக் கழிப்பவளாக இருந்தால்...

என் அழகைப் பார்த்து இன்று இரண்டு நபர்கள் மயங்கினார்கள், காதல் சொன்னார்கள் என்று அவளது அழகை அடிக்கடி புகழ்ந்து கொள்பவளாக இருந்தால்...

ஆண் நண்பர்களுடன் சினிமா, பீச் போன்ற இடங்களில் சகஜமாக உலவுகிறாள் என தெரியவந்தால்...

கல்யாணத்துக்கு அப்புறம் ஏதாவது பிரச்சனை பண்ணினா லேசுல விடமாட்டேன், போலீஸ்ல சொல்லி உள்ளே போட்டுருவேன் என மிரட்டுபவளாக இருந்தால்...

செக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவளாக இருந்தால்...

திருமணத்திற்கு முன்னர் செக்ஸ் உறவு கொள்வதில் எந்த தவறும் இல்லை என்ற தீவிர கொள்கையுடன் இருந்தால்...

அடிக்கடி விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கேட்டு நச்சரிப்பவளாக இருந்தால்...

பழைய ஆண் நண்பர்களுடன் தொடர்பு இருத்தல், புதிய ஆண்களிடம் காதலைத் தூண்டுவது போல பேசுதல் இருந்தால்...
இப்படிப்பட்ட பெண்களிடம் இருந்து ஆண் எவ்வளவு சீக்கிரம் விலகுகிறானோ அவ்வளவு நல்லது.



உஷார் பெண்ணே உஷார்...


காதலிக்கும் பெண்கள் கீழ்க்கண்ட குறைகளை ஆண்களிடம் காணும்பொழுது, இதையெல்லாம் திருமணத்திற்குப் பிறகு கண்டிப்பாக திருத்திவிடலாம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்காமல் காதலில் இருந்து விலகிவிடலாம்.

பணத்திற்காக அல்லது சொத்திற்காகத்தான் காதலிக்கிறான் என்பது உறுதியாக தெரியவந்தால்...

பெண் வேலை பார்த்து வரும் பணம் குடும்பத்திற்குப் போதும், வேலை பார்க்காமல் ஜாலியாக சுற்ற வேண்டும் என்ற மனநிலையில் ஆண் இருப்பதை அறிந்துகொண்டால்...

தங்கை அல்லது தோழிகள் எவரிடமாவது காதல் வசனங்களை பேசி கவிழ்க்க முயற்சி செய்வது தெரிந்தால்...

கவர்ச்சியாக உடை அணிந்துகொள், நான் சொல்லும் நபர்களிடம் நீ அன்பாகப் பேசினால், நான் எளிதாக காரியம் சாதித்துக்கொள்வேன் என்பதுபோல் பேசினால்...

காதலிக்கத் தொடங்கிய பின்னரும் வேறு ஏதாவது ஒரு பெண்ணிடம் அல்லது விபச்சாரப் பெண்களிடம் உடலியல் ரீதியான உறவு இருப்பதாகத் தெரியவந்தால்...

மிக அதிகமான ஆசை உள்ளவனாக, தேவையில்லாத தொந்தரவு கொடுப்பவனாக, நிலைமையை புரிந்து கொள்ளாதவனாக இருந்தால்...

முறிந்துபோய்விட்டது என சொன்ன முன்னாள் காதலியுடன் இன்னமும் சந்திப்பு, தொடர்பு இருப்பதாகத் தெரிந்தால்...

வேறு யாராவது பெண் காதலைச் சொன்னபோது, தற்போதைய காதல் பற்றி எதுவும் சொல்லாமல் டபாய்ப்பதாகத் தெரிந்தால்...

செக்ஸில் விபரீத ஆசைகள் கொண்டவர் என்பது தெரிந்தால், அதாவது இரண்டு பெண்கள், மூன்று பெண்கள், குரூப் செக்ஸ் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுபவராக இருந்தால்...

தவறான நடவடிக்கையினால் செக்ஸ் வியாதி வந்தவர் என தெரியவந்தால்...

அவ்வப்போது மனநிலை பாதிக்கப்படுபவர் என்பது தெரிந்தால்...

நடக்காத விஷயத்தை வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருப்பவர் என்றால், அதாவது ஒரு நாளாவது ஐஸ்வர்யா ராயுடன் வாழ்ந்துவிட வேண்டும் என விரும்பினால்...

செக்ஸில் ஆர்வம் இல்லாதவர் அல்லது ஆண்மைக் குறைபாடுடன், உறவுக்கு லாயக்கில்லாதவர் எனத் தெரியவந்தால்...

அளவுக்கு அதிகமாக சந்தேகப்படும் குணம் கொண்டவன் எனத் தெரிந்தால்...

பெண்கள் அடிமையாக வீட்டோடு அடைந்து கிடக்க வேண்டும், முக்கியமான முடிவுகள் எல்லாம் ஆண்தான் எடுக்க வேண்டும் எனும் பெண் அடிமை வியாதியாக இருக்கும் பட்சத்தில்...

பிறரது துன்பத்தில் இன்பம் காணும் சாடிஸ மனப்பான்மையில் இருந்தால்...



காதல் நாளை கொண்டாட ஃபெங் சூய் ஆலோசனைகள்!!!














மனிஷா கெளசிக்

வாலண்டைன் நாளுக்கு மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கை முழுமைக்குமானது இந்த ஆலோசனைகள். உங்களில் இன்னமும் தனியாய் இருப்பவர்கள், நமக்குத்தான் காதல் வாழ்க்கை தொடங்கவில்லையே, அதனால் இந்த நாளைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்று நினைக்கலாம், உங்கள் காதல் இந்த நாளிலேயே தொடங்கலாம். வாலண்டைன் நாளுக்குப் பின்னரும் உங்கள் உறவை நீட்டிப்பதே இந்த ஆலோசனைகளின் நோக்கமாகும். உங்களுடைய காதலருக்கு ஏதாவது ஒரு பரிசை நீங்கள் திட்டமிட வேண்டும், அதே நேரத்தில் அவர்களிடம் இருந்து வரக்கூடிய பரிசையும் எதிர்நோக்க வேண்டும். இப்படிப்பட்ட சிறு பரிசுகள் கூட உங்களின் உறவை ஆழப்படுத்தலாம்.

வாலண்டைன் நாள் என்பது உங்களுடைய காதலை வெளிப்படுத்துவதற்கும், அதன்மூலம் வாழ்க்கை முழுவதும் அந்த அனுபவத்தை நீட்டிக்கச் செய்வதற்குமான ஒரு வாய்ப்பாகும். அது மட்டுமின்றி, இந்த நாளில் உருவாகும் அந்த நெருக்கம் இந்த நாளையும் தாண்டி நீடிக்க வேண்டும் என்பதே. ஃபெங் சூயின் சாதகமான சக்தியூட்டும் பரிசுகள் குறித்த ஆலோசனைகள், இந்த நாளையும் தாண்டி உங்கள் மனதில் வாலண்டைன் நினைவுகளால் நிறைக்கும்.

ஃபெங் சூய் அணுகுமுறை

உங்களுடைய காதலருக்கு நீங்கள் அளிக்கும் பரிசின் சக்தியை அவர் வாழ்நாள் முழுவதும் இன்ப உணர்வை அளிக்கவல்லதாக இருக்க வேண்டும். அதில் சில:

() நன்கு அலங்கரிக்கப்பட்ட, சிறிய அளவிலான இயங்கக் கூடிய நீருற்றை பரிசாக தரலாம். நீரின் மென்மையான ஒலி அதில் இருந்து வருவதாக இருக்க வேண்டும். இது உங்களுடைய பணி அழுதத்தை குறைப்பதாக இருக்கும் என்பது மட்டுமின்றி, உங்கள் வாலண்டைனின் வாழ்க்கை முழுவதும் சக்தி அளிப்பதாக இருக்கும்.

() காற்று மோதி காதல் ஒலி எழுப்பும் மணிக் கொத்தை அளிக்கலாம். இது உங்கள் இல்லத்தில் எப்போதும் ஒரு சாதகமான சக்தியை அளித்துக்கொண்டே இருக்கும். இசை குறுவெட்டுகளும் இப்படிப்பட்ட சாதகமான சக்தியை அளிக்கக் கூடியவையே. இசை எப்போதும் உற்சாகத்தை அளிக்கவல்லது மட்டுமின்றி, அது வெற்றிச் செய்தியையும் அளிக்கும்.

உங்கள் காதலருக்கு பாரம்பரியமான வாலண்டைன் பரிசுகளை அளிப்பதாக இருந்தால், அதனை அவர் ஏற்கக் கூடியதாக பார்த்து தெரிவு செய்ய வேண்டும். பாரம்பரிய பரிசுகள் என்பது அது வாழ்க்கை முழுவதும் நீடித்து இருக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பரிசுகளில் சில:

() வீட்டிற்குள் வளர்க்கக் கூடிய தாவரங்கள் ஏதாவது அல்லது காதல் சின்னமான ரோஜாவை ஒரு ஜோடியாக அளித்திட வேண்டும். ஆனால் அந்த பரிசுகளையும் தாண்டியது உங்களின் காதல் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும், இல்லையேல் உங்கள் வாழ்க்கையில் பின்னாளில் அது சிக்கலை ஏற்படுத்திவிடும்.

() உங்கள் நகரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சிக்கோ அல்லது கலை நிகழ்விற்கோ தொடர்ந்து சென்று இணைந்து பார்க்கக் கூடிய வகையில் பல நாட்களுக்கு பார்வைச் சீட்டுகளை பெறவேண்டும். அல்லது திரைப்பட விழா ஏதாவது நடந்துக் கொண்டிருந்தால், அதற்கான பார்வையாளர் சீட்டுகளை வாங்கிச் சென்று இணைந்து பார்க்கலாம்.
() உங்களுடைய வாலண்டைன் சாக்லெட் விரும்பியாக இருந்தால், அவருக்கு பிடித்த சாக்லெட்டுகளை டஜன் கணக்கில் வாங்கி பரிசாக அளிக்கலாம். சாக்லெட்டுகளின் உள்ளே கிரீம் வைக்கப்பட்டிருப்பதாக இருந்தால் மிகவும் நல்லது.

() நீங்கள் அளிக்கக்கூடிய பரிசு எதுவாக இருந்தாலும் அது ஆண்டு முழுவதும் சக்தியை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதன் மூலம் உங்களின் உறவு பலப்பட வேண்டும்.







உங்கள் படுக்கையறையை அமைப்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அது வீட்டின் தென் கிழக்கு திசையில் இருக்க வேண்டும். படுக்கையறையில் கீழ்க்கண்ட பொருட்களை அழகாக அமைக்கலாம்.

() ஒரே அளவிலான மலர்களை வைக்க வேண்டும்

() ஒன்றை ஒன்று பார்த்த வண்ணமிருக்கும் இரண்டு மணிப் புறாக்களின் பொம்மைகளை வைக்கலாம்.

() இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளை, தங்கள் கழுத்துகளை ஒன்றோடு ஒன்று பிண்ணிக்கொண்டு நிற்பது போன்ற பொம்மைகளை வைக்கலாம்.

() இரண்டு இதயங்கள் அல்லது வேறு ஏதாவது ஒரு படம் - அதன் மத்தியில் 2 எண் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

வாலண்டைனை எதிர்பார்த்திருக்கிறீர்களா?

உங்களுக்கு இன்னும் காதல் துணை அமையவில்லையா? அப்படியானால், உங்கள் படுக்கையறையின் கிழக்குப் பகுதியை அழகிய பசுமையான தாவரத்தால் அழகு செய்யுங்கள். அந்த தாவரத்தின் சக்தி, புதிய உறவை ஏற்படுத்தவும், இருக்கும் உறவை பலப்படுத்தவும் உதவும்.

வாலண்டைன் நாளிற்கு நீங்கள் பரிசளிப்பதற்கு யாரும் இல்லையா? அப்படியானால், உங்களுக்கு நீங்களே ஒரு பரிசை தெரிவு செய்து அளித்துக்கொள்ளுங்கள். அன்பை, பரிவை, ஒருவர் மீதான மற்றவரின் ஆழந்த பற்றை அங்கீகரிப்பதுதான் வாலண்டைன் நாளின் நோக்கமாகும்.

இந்த நாளில் பெரிய விருந்தெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒன்றாக ஒரு நாள் சுற்றுலா அல்லது ஒரு விருந்திற்குச் செலவது போதுமானது. உங்களது காதலரின் அன்பையும் உறவையும் மதிப்பதும், அதில் உறுதியாக இருப்பதும்தான் முக்கியமானது.



ஆடம்பரக் காதல்!!!


காதல் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துக்காகவே சிலர் காதலல் விழுவதுண்டு. பணம், செல்வாக்கு, ஆள் வலிமை உள்ள ஆண்கள் காதலில் தங்கள் பலத்தினை காட்டவேண்டும் என்பதற்காக, யாராவது ஒரு பெண் மீது குறி வைத்து காதல் காட்டுவார்கள்.

அந்தக் காதலை ஜெயிப்பதற்காக பணம், பலம் அனைத்தையும் காட்டுவார்கள். திருமணம் என்ற சூழல் ஏற்படும்போது மிக நல்ல பிள்ளையாக மாறி, "அம்மா, அப்பா சொல்படிதான் நடப்பேன்" என்பார்கள். ஏனென்றால் இவர்களது பெற்றோரின் சொத்து அவசியம் தேவை என்பதுதான் உண்மை.

இதேபோல் சில பெண்களும் தங்கள் இளமை மற்றும் அழகினை மற்றவர் முன் பறைசாற்றுவதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் மிகவும் அந்நியோன்யமாக பழகுவார்கள். அவர்களுக்கு என்று ஒரு எல்லை வைத்துக்கொண்டு, அதற்குப் பின் அந்தக் காதலர்களை அவமரியாதை செய்து அனுப்பிவிடுவார்கள்.

அதாவது இப்படிப்பட்டவர்கள் காதல் என்பதை ஒரு பொழுதுபோக்காக ஜாலியாக எடுப்பவர்கள். இப்படிப்பட்டவர்களிடம் சிக்கி ஏமாந்து போகும் ஆண், பெண்தான் ஏமாற்றம் தாங்க முடியாமல் தற்கொலை என்ற மோசமான முடிவினை எடுப்பதுண்டு.

இப்படிப்பட்ட காதலைக் கண்டுகொள்வதும், விலக்குவதும் மிக எளிது. அதாவது ஆரம்பமே மிக அவசரமாக இருக்கும்.

"காதலிக்கிறேன்" என்ற ஒரு வார்த்தையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சகஜமாகப் பேசுவார்கள். எல்லா முடிவுகளும் அவர்கள் எடுப்பதாகவே இருக்கும். நாளை ஒரு இடத்திற்குப் போகலாம் என முடிவெடுத்தால் எங்கே போவது, என்ன செய்வது, எப்பொழுது திரும்புவது என எல்லாவற்றையும் அவர்களே முடிவெடுப்பார்கள்.

இந்த வகையான ஆண், பெண் இருவரும் திருமணம் பற்றி பேசமாட்டார்கள். நம்பு என்று சந்திப்பார்கள். இவர்களை நல்ல காதலர்களாக மாற்றுவது என்பது நாய் வாலை நிமிர்த்துவது போன்று கடினமானது.

எனவே, இப்படிப்பட்ட நபர்கள் என்று அறியவரும் பொழுது இது காதல் இல்லை என்று தெளிவடைவது நல்லது. மேலும், அவர்களுடன் நட்பினை தொடர்வதும் ஆபத்தானதே. ஏதாவது ஒரு கடினமான இக்கட்டான சூழலில் யாராவது ஒருவருடன் வாழ முடிவெடுத்துவிடுவார்கள். அவர்களுடன் கடைசி வரை ஓர் அடிமை நிலையில் வாழ வேண்டுமே தவிர அந்நியோன்யமாக வாழ முடியாது.



காதலர் தினத்தில் திருமணம்!!!





மனிஷா கெளசிக் - ஜோதிட ஆலோசகர்

அன்பிற்கும் காதலிற்குமான மாதமாக பிப்ரவரி மாதம் கருதப்படுகிறது. அதிலும் பிப்ரவரி மாதத்தில் வரும் காதலர் தினத்திலோ அல்லது அந்த நாளின் நெருக்கத்திலோ திருமணம் செய்து கொள்வது என்பது மிகவும் பொருத்தமுடையது. திருமணத்தைப் பற்றி தாமஸ் மூர், “வேறுபட்ட விதியையும், வாழ்வையும் கொண்ட இரண்டு ஆத்மாக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் இணைக்கும் உன்னதமான பந்ததைத்தை ஏற்படுத்துவது திருமணமாகும்” என்று கூறினார்.

ஒவ்வொரு நாளும் நமது வாழ்வு என்பதும் கூட நமது ஆத்மனின் புரியாத, கால வரையறையற்ற ஒரு பந்தம்தான். காதலர் தினத்தில் தங்களது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள முடிவு செய்துள்ள எனது வாசகர்கள், அது தொடர்பான பணிகளில் மூழ்கியுள்ள வேளையில் நான் இதனை எழுதுகிறேன். இருந்தாலும், உங்களுடைய வாழ்வை அன்பினாலும், காதலாலும் நிரப்ப நினைத்தால் உங்கள் திருமணத்திற்கு நான் கூறும் இந்த ஆலோசனைகளையும் சேர்த்துக்கொண்டால், அது உங்கள் மண நாளை மேலும் நிறைவுடையதாக்கும்.

உங்களுடைய திருமண அழைப்பிதழில் இருந்தே காதலர் தின வண்ணத்தை கொடுக்கத் துவங்குங்கள். திருமண அழைப்பிதழில் மன்மதனின் அழகிய உருவத்தை பொறித்து, வார்த்தைகளை தங்க நிறத்தில் இருக்குமாறு அமையுங்கள். உங்கள் நாளின் வண்ணத்தை உங்கள் அழைப்பிதழ் பறைசாற்றட்டும். திருமண அழைப்பிதழில் உங்கள் இருவரின் புகைப்படங்களையும் பொறித்திடுங்கள்.

உங்கள் திருமண பந்தத்தை அனைவருக்கும் தெரிவிக்கும் அந்த நிகழ்விற்கான மண்டபத்தை மிக எச்சரிக்கையாக தெரிவு செய்யுங்கள். நீங்கள் எந்த மண்டபத்தை தெரிவு செய்தாலும், அங்கு ஏராளமான மெழுகு வர்த்திகளை கொளுத்தி வைக்கும் வசதியுள்ளதாக அது இருக்கட்டும், ஏனெனில் மெழுகு வர்த்திகள் திருமண நாளிற்கான மனச் சூழலைத் தரும். இயற்கையான ஒரு சூழலில் திருமண நிகழ்வு நடைபெறட்டும். அதற்கேற்ற வகையில் ஒரு தோட்டத்தையோ அல்லது மலர்கள் பூத்த செடிகள் நிறைந்த மாடி வீட்டையோ தெரிவு செய்யுங்கள்.

திருமண நிகழ்விற்கு முக்கியமானது மலர்களே, மிக அதிகமான மலர்களே. காதலர் தினத்தை...






நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்களோ அதனை உணர்த்தும் விதமான மலர் அமைப்பு ஒழுங்கமையுங்கள். திருமண மண்டபத்தின் மையத்தில் தங்க நிறத்தில் மன்மதனின் சிறு பொம்மைகள் பதிக்கப்பட்ட மலர் அலங்காரத்தை செய்து அசத்துங்கள். உங்களுடை மதிப்புமிக்க விருந்தினர்கள் அமரும் இருக்கைகள் பின்னால் மலர் அலங்காரம் அமையுமாறும் செய்யலாம்.

மண நாளிற்கான ஒரு வண்ணத்தை தெரிவு செய்து அதனை பளிச்சிடச் செய்வது நன்றாக அமையும். மண்டபத்தின் ஒரங்களையும், திருமணம் நடைபெறும் பந்தலையும் தங்க கரையுடன் கூடிய தூய வெள்ளை நிற துணியைக் கொண்ட அலங்காரத்தைச் செய்யலாம். இதோடு, நீங்கள் விரும்பினால், சிகப்பு அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்தை தனியாகவோ அல்லது சேர்த்தோ மேலும் அழகு சேர்க்கலாம். உங்களின் திருமணத்திற்கு மிக முக்கியமான காதலர் தின உணர்வை ஏற்படுத்த பளபளக்கும் நீலத்துடன், மிளிரும் தங்கம், பச்சை ஆகியவற்றை வெண்மையுடன் கலந்து அலங்காரங்களை அமையுங்கள்.

காதலர் தினத்தில் திருமணம் செய்துகொள்ளப்போகும் நீங்கள், அன்றைய தினத்தில் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் உடையையே அணிய வேண்டும். சிகப்பு கரையுடன் கூடிய வெண்மை நிற ஆடைகளை அணியலாம். சிவப்பு வண்ணத்தை பயன்படுத்தலாம், ஏனெனில் அது அன்பைக் குறிப்பதல்லவா? உங்களின் அழகிய கூந்தல் அலங்காரத்திற்கேற்ற மலர்களை கூந்தலோடு இணையுங்கள். உங்கள் திருமண நகைகளும் காதலர் தின உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் இதயம், ரோஜா, மன்மதன், புறாக்கள் ஆகிய ஏதாவதொன்று பொறிக்கப்பட்டதாக இருக்கட்டும். கெம்பு அல்லது சிவப்பு நிற ஆபரணக் கல் பொதித்த மோதிரங்களை அணியுங்கள். மணமகன் சிகப்பு வண்ண டை கட்டியிருத்தலும், மணமகள் இளம் சிவப்பு, வெள்ளி நிர உடையுடன் இருப்பதும் பொருத்தமாக இருக்கும்.

காதலர் தினத்தில் திருமணம் செய்யும்போது இசை இல்லாமலா? காதலை வெளிப்படுத்தும் இதமான இசையை பரப்புங்கள். எல்லோருக்கும் பரிச்சயமான காதல் பாடல்களை ஒலிக்கச் செய்யுங்கள். உங்களை வாழ்த்த வந்துள்ளவர்களும் காதல் உணர்வில் திளைக்கச் செய்யும் இசையை வாசிக்குமாறு செய்யுங்கள்.

காதலர் தினத்தில் திருமணம் செய்வது என்பது தொன்று தொட்டு நடைபெற்றுவருவதாகும். காதலுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட நாளை விட வேறு எந்த நாளில் வாழ்வு முழுவதையும் அன்பிற்காக அர்ப்பணிக்கும் பந்தத்தை அமைக்க முடியும்? இந்த நாளில் உங்களின் திருமணத்தை வைத்துக்கொண்டால் அதுவே உன்னதமான அந்தக் காதல் உணர்வைத் தரவல்லதாகும்.


Posted by Parveen Raj at Thursday, April 16, 2015

Email This

BlogThis!

Share to Twitter

Share to Facebook

Share to Pinterest









1 comment:









Nalliah8 September 2016 at 02:45


"ஆதலினால் காதல் செய்வீர்"

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காதல் எங்கள் மத்தியில் இருந்தது. பின்னர் குழந்தைத் திருமணம் நடைமுறைக்கு வர, எங்கள் மத்தியில் காதல் அருகிவிட்டது. இன்று நாங்கள் காதல் அற்றவர்களாக மாறிவிட்டோம். “ஆதலினால் காதல் செய்வீர்” என அறை கூவியவன் பாரதி.

ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன், அரசாட்சிகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரம், சாதி சார்ந்ததாக மாறிவிட்டது. இந்தியாவில் சாதி அதிகாரமும், சாதிப் பிரிவினையும், படு மோசமாக இருந்தன. சாதி அடையாளங்களை மீறுவது பலமாகத் தடுக்கப்பட்டு, அதற்காகவே குழந்தை வயதில் கல்யாணம் என்பது நடைமுறையாகி, இரண்டாயிரம் வருடங்களாக நாங்கள் காதல் என்றால் என்னவென்று தெரியாது வாழ்கின்றோம். இதனால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இதயங்கள்

எழுதியவர் : (22-Apr-17, 4:37 am)
பார்வை : 832

மேலே