மழை பெய்த மாலை வேளை
மழை பெய்த மாலை வேளை....
முடி திருத்தும் கடை ஒன்றில் செய்திதாள் படித்துக்
கொண்டிருந்தேன்..
சில மாவட்டங்களில் மழை பெய்யும்
என்றது வானிலைச் செய்தி..
வெளியே பார்க்கிறேன்...
மழை பெய்யும் முன் அறிகுறி தோன்றிருந்தது..
ஓ.. இன்று மழை பெய்யுமோ...
சலூன் கடையில் என் முறை வந்தது
திடும் என சத்தம்...
மழை ஆரம்பித்திருந்தது..
வீசும் காற்றில் டீக்கடை தகர கூரை
இடம் மாறிருந்தது..
காற்று சற்று பலமாகவே
வீசுகிறது. மனிதர்கள்
நனைந்தார்கள்.. நனையாமல்
இருக்க ஓடிக் கொண்டிருந்தார்கள்...
மரத்தின் ஒரு கிளை முறிந்து விழுகிறது..
மோட்டார்களில் பயணிப்பவர்கள் வாகனத்தை
அனைத்து விட்டு டீக்கடையில்
சூடாக டீ சிகரெட் பிடித்துக்
கொண்டிருக்கிறார்கள்..
ட மார்.. தூரத்தில் இடி விழுகிறது..
அதன் முன் மின்னல் மின்னி
மறைகிறது..
டீக்கடை வாசலில் குழந்தையோடு
நின்றிருந்தவர் ஓடி ஆமினிக்குள்
நுழைந்து கதவை சாத்திக்
கொள்கிறார்...
16 - கால் மண்டபத்தில்
நிகழவிருந்த கூட்டம்
ரத்து செய்யப்பட்டது..
ரோடியோக்கடை வேணு
சோகத்துடன் மழையில் அமர்ந்து
கொண்டிருக்கிறான்...
கல்யாண மண்டப பந்தல்
காற்றில் ஆடிக் கொண்டிருக்கிறது...
மின்சாரம் எப்பொழுதோ போயிருந்தது....
சற்று நேரத்தில் மழை குறைகிறது
அவரவர் கிளம்ப ஆரம்பிக்கிறார்கள்...
வெளியே வருகிறேன்...
ஒரு பில்டர்..
வானம் தூறிக் கொண்டிருக்கிறது...
மழை மழை
பற்றிய பேச்சு எங்கும்...
மழையே மறுபடி வருக...