கடல்கொண்ட குமரிக்கண்டம்

தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த தேவநேயரும், தஞ்சாவூரைச் சேர்ந்த அண்ணாமலையும் நண்பர்கள். இருவரும் பண்டையத் தமிழ் இலக்கியத்தை நன்கு கற்று அறிந்தவர்கள். தமிழ் மொழி தோன்றிய காலத்தையும், நாகரீகத்தை பற்பற்றி அறிவதிலும் அவர்களின் ஆராய்ச்சிகள் இருந்தன. அவர்கள் கூடவே இலங்கை, அவுஸ்த்திரேலியா, மடகாஸ்கர் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் இருந்தார்கள்.

அன்று அறிவியல் பத்திரிகையொன்றில் வந்திருந்த இருசெய்திகள் அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. முதல் செய்தியானது பூம்புகாரில் இருந்து கிழக்கே 5 கிமீ தூரத்தில் கடலுக்கடியில் 23 கிமீ ஆழத்தில் ஒரு நகரம் இருப்பதைக் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் என்பதாகும்.

இரண்டாவது செய்தியானது, தனுஷ்கோடியையும் இலங்கையையும் இணைக்கும் இராமர்பாலம் பற்றியது. அது, வானரங்களால் கட்டப்பட்டதில்லை எனவும், அது 20,000 ஆண்டுகளுக்கு முன்னமே, இலங்கையும் தென் இந்தியாவும் குமரிக்கண்டம் என்ற நிலப்பரப்பால் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும், தாமிரபரணி ஆறு இலங்கையில் மேற்கே மன்னார் வளைகுடாவில் கலக்கும் மல்வத்து ஓயாவுடன் இணைந்து இருந்ததாகவும், அதனாலேயே இலங்கைக்குத் தப்பரப்பேன் என்ற பெயர் தோன்றியது என்றும் இரண்டாம் செய்தி கூறியது.

“ஐயா, நான் பலதடவை உமக்குச் சொன்னேனே, சிலப்பதிகாரத்திலும் மணிமேகலை காப்பியத்திலும், கடல் கொண்ட காவரிப்பூம் பட்டிணத்தையும், குமரிக்காண்டத்தையும் பற்றிக் குறிப்பிட்டிருப்பதை! பூம்புகார் என்ற காவரிப்பூம்பட்டிணம் கிமு 3 ஆம் நூற்றாண்டில் ஒரு வணிக நகராக இருந்தது. கிரேக்க, அராபிய, ரோமானியர், சீனர் ஆகியோர் தென் இந்தியாவோடு வியாபாரம் செய்ய அந்த நகருக்கு வந்து போனார்கள். அந்தச் சூழலிலேயே சிலப்பதிகாரக் கதை எழுதப்பட்டது. இந்தச் செய்திகள் குமரிக்கண்டம் இருந்ததற்கு ஆதாரம்” என்றார் அண்ணாமலை.

“அண்ணாமலை. நான் ஓரளவுக்கு இதை ஏற்றுக் கொள்கிறேன். கி.மு.6-ம் நூற்றாண்டு தொடங்கி கி.மு.4-ம் நூற்றாண்டு வரையிலான இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் மகாவம்சம் என்ற சிங்கள நூல், கிமு 3 ஆம் நூற்றாண்டில் களனி திஸ்ஸ மன்னன் காலத்தில் ஏற்பட்ட சுனாமியால் இலங்கையின் மேற்குப்பகுதி பாதிப்புக்கு உள்ளாகியது என்றுதெரிவிக்கிறது. கொழும்புக்கு அருகே உள்ள களனி நகரத்தைக் கடல் 11 மைல்கள் அந்த சுனாமி விழுங்கி விட்டது அப்போது, யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள சப்த தீவுகளும், புத்தளத்துக்கு அருகே பல தீவுகளும் தோன்றியதாகச் சொல்கிறார்கள். இக்காலத்தில் பூம்புகார் நகரமும் மாமல்லபுரத்தின் ஒரு பகுதியும் கடலுக்குள் மறைந்திருக்கலாம். இத்தோடு மடகாஸ்கர் தீவில் உள்ள லெமூர் என்ற ஒருவகை மிருகம் ஆஸ்திரேலியாவில் உண்டு என்றார்கள் இதோ வந்திருக்கும் என் நண்பர்களான மடகாஸ்கர் நாட்டு அல்பர்ட்டும், அவுஸ்த்திரேலியாவைச் சேர்ந்த மார்டின்வன் என்பவரும். இது மடகாஸ்கர் தீவும் ஆஸ்திரேலியாவும் ஒரே நிலப்பரப்பாக இருந்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். 300 கர்ஜுலன் தீவுகளும் குமரிக்கண்டத்துக்குள் அடங்கும்.” அங்கிருந்த தொல்பொருள் ஆராச்சியாளரான இலங்கை வாசி குணரத்தினம் அவர்கள் இருவரும் சொன்னதை ஆமோதித்து விளக்கினார்.

“அது சரி, இந்த கர்ஜுலன் தீவுகள் எங்கை இருக்கிறது?” அண்ணாமலை கேட்டார்.

“ இவை தனித்து விடப்பட்ட தீவுக் கூட்டங்கள். இங்கு மிக குறைந்த மக்களே வாழ்கிறார்கள். மடகாஸ்கர் தீவில் இருந்து தென் கிழக்கே தென் துருவத்துக்கு அருகே, சுமார் 2000 மைல்கள் தூரத்தில் அமைந்துஉள்ளது. இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் பல தீவுக் கூடங்கள் உண்டு. இவை எல்லாம் ஒரு காலத்தில்குமரி கண்டத்தில் இருந்திருக்கலாம்” குணரத்தினம் சொன்னார்
“அது சரி குணரத்தினம், கிமு 3 ஆம் நூற்றாண்டுக்குமுன்பும் சுனாமி இலங்கைத் தீவை தாக்கியதா”? அண்ணாமலை கேட்டார்.
“ கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே சிவ பக்தன் இராவணன் ஆட்சி காலத்தில் சுனாமிகள் தோன்றியதால் அம்மன்னன் இலங்கைத். தீவை சுனாமி அழிவில் இருந்து காப்பற்ற தீவின் நான்கு திசைகளிலும் கரையோரமாக, வடக்கில் நகுலேஸ்வரம், கிழக்கில் கோணேஸ்வரம், மேற்கில் திருகேதீஸ்வரம், தென் மேற்கில் முன்னேஸ்வரம், தெற்கில் தென்னாவரம் ஆகிய 5 சிவ ஈஸ்வரங்களைத் தோற்றுவித்தான் என்பர் சரித்திர ஆய்வாளர்கள்” குணரத்தினம் சொன்னார்..
“தேவனேயரே, நீர்தான் தமிழர் நாகரீகம் பற்றி தெரிந்தவராயிற்றே, இந்து நதி பள்ளத்தாக்கு நாகரீகத்துக்கு முன்பே தமிழ் நாகரீகம் தோன்றியதா”? அவுஸ்த்திரேலிய ஆராய்ச்சியளர் மார்டின்வன் கேட்டார்.

“இந்தியாவைப் பொறுத்தமட்டில் சிந்து சமவெளி நாகரீகம் தான் மிகவும் பழமையானது என்கிறது வரலாறு. ஆனால் அதற்கெல்லாம் முன் தோன்றிய மூத்த நாகரீகம் தமிழனின் நாகரீகம். ஆதனால் தானோ என்னவோ கல் தோன்றா மண் தோன்றா காலத்து மூத்த தமிழ் என தமிழை அழைத்து மிகவும் பழமை வாய்ந்த தமிழ் மொழியும், தமிழர் நாகரீகம் எனவும் மதிப்பு கொடுத்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை கடல் கொண்டு விட்டது. குமரிக் கடலின் அடியில் உள்ள லெமூரியா கண்டத்தில தான் மனிதன் முதல் தோன்றினான். லேமூர் என்றால் பரிணாம வளாச்சியில் குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்டவன் எனபது பொருள். ஆகவே உலகில முதல் பரிணாம வளர்ச்சி குமரி கண்டத்தில் நடந்திருக்கிறது. இந்தியாவின தென்பகுதியான கேரளா, தமிழ்நாட்டில் இருந்து இந்தியா இந்து சமுத்திரத்தில நிலப்பரப்பாக வரிவடைந்து இலங்கைத் தீவு, மடகஸ்கார், தென் கிழக்காசியா, அவுஸ்திரேலியா போன்ற நிலப்பரப்புகளை உள்ளடக்கியதாக வரலாறு சொல்கிறது. குமரிக்கடல் 49 ஆயிரம் சதுர மைல்கள் என்கிறார்கள். கடல் கொண்ட குமரி கண்டத்தின கிழக்கு எல்லை ஆவுஸ்திரேலியா, மேற்கு எல்லை மடகஸ்கார் , தேற்கெல்லை அண்டார்டிகா. ஒரு காலத்தில இவை இவை அனைத்தும் ஒன்றாக இருந்திருக்கின்றன. காலப்போக்கில பிரமாண்டமான கடற்கோள் இவைற்றை பிரித்துள்ளது. இக்கடல் தோன்ற காரணம் கண்டங்களின அசைவு ( Continental Shift) அல்லது Meterioid எனப்படும் வானில் இருந்து இந்து சமுத்திரத்தில் விழுந்த பெரும் எரிகல்லினால் ஏற்பட்ட சுனாமி போன்ற பிரமாணட்டமான பெரும் அலைகள் அல்லது கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் தோன்றிய கடற்கோளாக இருந்திருக்கலாம். டைனோசர்கள் என்ற மிருக இனம் கணப் பொழுதில் உலகில் இருந்து மறைந்தன என்கிறது வரலாறு. அதற்கு காரணம் பூமியை விண்கல் தாக்கியதே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உயரமான நிலப் பரப்பு கூட கடலில் மூழ்க அதற்கான மிக உயர்ந்த கடல் அலைகள் தோன்றியிருக்கலாம்.” விளக்கம் கொடுத்தார் தேவராயர்.

அவர் கொடுத்த விளக்கத்தை கேட்டு. அவுஸ்த்திரேலிய ஆராச்சியளர் மார்டின்வன் பேசத் தொடங்கினார்

“குமரி கண்டம் அவுஸ்திரேலியாவையும் மடகஸ்காரையும் உள்டக்கியிருந்தது என்பதற்கான பல ஆதாரங்கள் உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக அவுஸ்திரேலியா நாட்டின பழம்குடியினர் இன்னும் சிவா நடனம் என்ற பழம் பெரும் சிவா நடனத்தை ஆடுகிறார்கள். நெற்றில் கண்வைத்துக் கொண்டு முக்கண்ணுடன் ஆடுகிறார்கள். வன உயிர்களை வேட்டையாட அவர்கள் பூமராங் என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறார்கள். இது எதிரியை அப்படியே தாக்கிவிட்டு திரும்பி அனுப்பியவரிடமே வந்துவிடும். இந்த பூமராங்கை இன்றும் ஊட்டி கோடைக்கானல் பகுதிகளில் வாழும் பழம் குடிமக்கள் பயன்படுத்துகிறார்கள். இது போல் ஆபிரிக்க பழங்குடியினமக்களுக்கும் தமிழர்களுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அவர்களும் குடும்பங்களில் வயதானவர்களை நாம் அழைப்பது போல் பாட்டி என அழைக்கின்றனர். அவல் என்ற பெயரை உச்சரிக்கிறார்;கள். நமது மீனவர்கள் நாட்டுப் படகை தெப்பம் , மிதப்பு என்று அழைப்பது போல் ஆபிரிக்க பழங்குடியினரும் அச்சொற்களை பாவிப்பதற்கு ஒரு காலத்தில் ஆபிரிக்கா குமரிகண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதற்கு ஆதாரமென்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்”.
மடகாஸ்கர்நாட்டு அல்பேர்ட் ஆபிரிக்காவின் கருப்பு இன மக்களை பற்றி அறிந்தவர். அவர் தனது கூற்றை சொன்னார்.

“நீக்ரோயிட்ஸ் ( Negeroids) என அழைக்கப்;படும் கறுப்பின மக்கள் ஆபிரிக்காவின பெரும் பகுதிகளில் வாழ்வதை பலர் அறிந்ததே. கறுப்பின அவுஸ்திரேலிய பூர்வ குடிமக்களான (Aboriginal), அந்தமான் தீவு பூர்வ குடிவாசிகள்; , இலங்கையை சேர்ந்த வேடவர்கள், நிட்டாவோ இனங்கள் , இந்தியாவின பூர்வ குடிமக்கள் எல்லோரும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். சொலமன் தீவு மக்களும் ஆபிரிக்க இனத்தவருக்கும் நிறத்தில் பல ஒற்றுமைகள் உண்டு. பூமத்திய ரேகையை உள்ளடக்கிய குமரிகண்டம் அதிக வெப்ப நிலை காரணத்தால் அக்கண்டத்தில வாழந்தவர்களின் சருமத்தின நிறம் கறுப்பாக அமைந்தது என்கிறது ஒரு வாதம். நாவலம் என்ற குமரிகண்டத்த்தின தென் பகுதி தமிழர் நாகரீகம் வளர்ந்த பகுதியென்கிறது வரலாறு. தமிழ் ஆராயச்சியாளாகள் புழனெறயயெ எனற குமரி கண்டத்தின வடபகுதியே லெமூரியா கணடம் என அழைக்கப்படும் குமரி கண்டமாகும். சுரவய இ னுநவைய போன்ற நாடுகளைப்பற்றி இந்திய இதிகாசத்தில் பேசப்படுகிறது. இந்நாடுகள் குமரி ;கண்டத்தின் ஒரு பகுதியாகயிருந்து கடலுக்குள் மூழ்கியதாக வரலாற்றாளர்கள் கருத்து. கறுப்பின மக்கள் ஆபிரிக்கா, இந்தியா , அவுஸ்திரேலியா, பப்புவா நியூ கினி பொன்ற தேசங்களில் காணப்படுவதற்கு இந்நாடுகள் எல்லாம் ஒருகாலத்தில ஒன்றிணைந்த நிலப்பரப்பாக இருந்தது என்பது ஒரு விளக்கம். இதற்கு ஆதாராமாக ஆவுஸ்திரேலிய பூர்வ குடிமக்களின பூர்வீகம் குமரி கண்டத்தில தோன்றியது என்பர். 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தென் அமெரிக்கா. ஆபிரிக்கா, இந்தியா , அவுஸ்திரேலியா, தென் துருவம் ஆகிய நிலப்பரப்புகள் ஒரு பரப்பாக புழனெறயயெ என்ற பெயரில் அமைந்ததென வல்லுனர்கள் கூற்று. பூமியின் சுழற்சி காரணமாக இந்நிலப்பரப்பு பிரிந்து புது கண்டங்கள் தோன்றியிருக்கலாம். உலகப் படத்தினை சற்ற கவனமாக உற்று நோக்கினால் ஒவ்வொரு கண்டத்தினது கரையோரங்களின் அமைப்பு மற்றைய கண்டத்துடன் பொருந்தக்கூடியவகையில் அமைந்துள்ளது. ஒரு உருளியை ( ball) எவ்வாறு உடைத்துவிட்டு பொருத்த முடியுமோ அவ்வாறு அமைந்துள்ளது. ஒன்று சேர்ந்த கொட்வானா கண்டம் பிரிந்தபோது தற்போதைய கண்டஙகள் தோன்றின. பவழப் பாறைகளை கொண்ட தீவுகள் இந்து சமுத்திரத்தில் தோன்றின. இவ்வாறு தோன்றியதீவுகளில் மால தீவு . லக்கதீவுகள், கொக்கூஸ் தீவுகள், சாக்கோஸ் தீவுகளான டியஜோ கார்சியா போன்றவை அமையும். இந்தியா , இலங்கை, பவழப்பாறைத் தீவுகள் , மடகஸ்கார் போன்ற நாடுகளில் உள்ள தாவரங்களுக்கிடையே உள்ள ஒற்றுமையும் குமரிகண்டம் இருந்ததிற்கு ஒரு ஆதாரமாகும்”


“இந்தியா, இலங்கை, அவுஸ்த்திரேலியா, மடகாஸ்கர், சீசெல்ஸ், மொரேசியஸ், மாலை தீவு இவைகளோடு, இலங்கைக்குத் தெற்கே 1800 மைல் தூரத்தில் உள்ள, அமெரிக்காவுக்குச் சொந்தமான டிகோ கார்சியா தீவும் ஒருகாலத்தில் குமரிக்காண்டத்தினுள் இருந்தவை என்பது ஒரு நம்பிக்கை., சுமார் கிமு 20,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த 8 நாடுகளும் மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாடாக இருந்தன என கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ . லுமேரியா கண்டம் என்றபெயரில் இருந்ததாகக் குறிப்பிட்டு உள்ளார்.” தேவநேயர் சொன்னார்
“அது உண்மைய இல்லையா என்டறு கண்டறியவெ எட்டு நாடுகளில் இருந்து சமுத்திரவியல், தொல்லியல், தமிழ் இலக்கியம் அறிவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகள் செய்து அனுபவம் பெற்ற ஏழுபேர் அடங்கிய குழுவாகி நாம் கூடியுள்ளோம் என்றார் அமெரிக்க தேசத்து வில்லிமஸ்
******

, எட்டு நாடுகளும் ஒன்று சேர்ந்து அளித்த நிதி உதவியோடு உண்மையைக் கண்டறியத் தமது ஆராய்ச்சியைக் கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறையில் இருந்து ஆரம்பிக்கிறார்கள்.
இலங்கையைச் சேர்ந்த குணரத்தினம், இந்தியாவைச் சேர்ந்த தேவநேயர், அண்ணாமலை, மடகாஸ்கர்நாட்டு அல்பேர்ட், மாலத்தீவு ஹசன், சீசெல்ஸ் நாட்டு நிர்மல், அவுஸ்த்திரேலியாவைச் சேர்ந்த மார்டின்வன், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம்ஸ் ஆகிய எட்டு அறிவியலாளர்கள் வில்லிமஸ் கூறிபடி இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். குமரித் திட்டமென்ற பெயரில் ஆராய்ச்சி ஆரம்பிக்கப் பட்டது.
தேவநேயரும், அண்ணாமலையும் பண்டைய தமிழ் இலக்கியத்தை நன்கு கற்றறிந்தவர்கள். மதுரை நகரில் பழம் ஏட்டுச்சுவடிகளை வாசித்து அறிந்தவர்கள். மடகாஸ்கர்நாட்டு அல்பேர்ட்டும், மாலத்தீவு ஹசன்னும் கடலில் ஆழத்துக்கு நீந்திப் பல மணி நேரம் இருக்கும் திறமை படைத்தவர்கள்.
சீசெல்ஸ் நாட்டு நிர்மல் அவுஸ்த்திரேலியாவை சேர்ந்த மார்டின் அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம்ஸ் ஆகியவர்கள் ஆழ்கடல் அறிவியல் துறையில் பல ஆராய்ச்சி செய்தவர்கள். குணரத்தினம் ஒரு தொல்பொருள் ஆராச்சியாளர். இராமர் பாலத்தின் தோற்றத்தைப் பற்றி சேது சமுத்திர திட்டத்தில் ஈடுபாடுள்ள பொறியாளர்களோடு சேர்ந்து ஆராய்ச்சி செய்து அறிக்கை சமர்ப்பித்தவர்.
பலதுறைகளில் தேர்ச்சி பெற்ற இவர்கள் குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்ததா, அக்காண்டத்தில் வாழ்ந்தவர்கள் என்ன மொழி பேசியவர்கள், அவர்கள் கலாச்சாரம் என்ன, அறிவியலில் முன்னேறியவர்களா, அக்காண்டத்தில் ஓடிய நதிகள் எவை, அப்படி ஒரு கண்டம் இருந்திருப்பின் அதன் தலை நகரம் எது, எக்காரணத்தால் அக்கண்டம் மறைந்தது போன்ற கேள்விகளுக்கு விடைகள் காண ஆழ்கடல் ஆராய்ச்சிகள் நடத்தத் தேவையான எதிரொலிக் கருவிகளும், செய்மதி தொடர்பு கருவியும் பொருத்திய “குமரி” என்ற பெயருள்ள கப்பலில் தமது பயணத்தை ஆரம்பித்தனர். அவர்களுக்குத் துணையாக பத்து மாலுமிகள், மூன்று சமையல்காரர் சென்றனர். அக்கப்பலுக்கு இன்மார்சட் தொலை தொடர்பு நிறுவனம் செய்மதி மூலம் எல்லா விதமான தொடர்புகளை செய்வதற்கு வசதிகள் தம் செலவில் செய்து கொடுத்திருந்தது.
கன்னியாகுமரி முனையில் இருந்து தெற்கே சுமார் 1800 கிமி தூரத்தில் குதிரை லாட வடிவில் அமைந்த டிகோ கார்சியா என்ற தீவில் அமெரிக்க விமானத்தளம் அமைந்துள்ளது. இத்தீவில்இருந்து பயங்கரவாதத்துக்கு எதிராக ஈராக், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல்கள் நடத்தியது. அமெரிக்க விமானத்தளமாக இருக்கும் இத் தீவில் முன்பு சுமார் இரண்டாயிரம் மக்கள் வாழ்ந்தனர். பிரித்தானியர் அத்தீவை அமெரிக்காவுக்கு விற்றபின், அம்மக்களை மொரேசியஸ் தீவுக்குப் புலம்பெயர வைத்தனர். 60 தீவுகள் கொண்ட இத்தீவுக் கூட்டமும் குமரிக்கண்டம் எனக் கருதப்படும் பகுதிக்குள் அடங்கும்.
“குமரி” என்ற ஆராய்ச்சிக்கப்பல் கன்னியாகுமரியில் இருந்து தன் பயணத்தைத் தென்துருவத்தை நோக்கி ஆரம்பித்தது. கடலுக்கு அடியில் உள்ள நிலப் பரப்பை சோனா எனப்படும் எதிரொலிக் கருவி மூலமும், ஈர்ப்பு கிரேடியோமீட்டர் மூலமும், செய்மதி உதவியோடும் படம் எடுத்தனர். அவர்கள் எதிர்பாராதவாறு கடலுக்கடியில் உள்ள நிலப்பட்டையில் வெடிப்புகள் இருப்பதைக் கண்டனர். அது போன்ற வெடிப்புகளே 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியா அருகே கடலுக்கு அடியில் தோன்றிய பூகம்பத்தால் உருவாகிய சுனாமிக்கு காரணம் என்பதையும் அறிந்தனர். சில பகுதிகளில் 5 மைல் ஆழத்துக்கு அகழிகள் இருப்பதைக் கண்டனர்.

குமரிமுனையில் இருந்து 800 மைல் தூரத்தில் அவர்கள் கடலுக்கு அடியில் ஒரு மைல் ஆழத்தில் கடற்கன்னிகளும் , கடல் ஆடவர்களும் உல்லாசமாக நீந்துவதைக் கண்டு அதிசயித்தார்கள். அவர்களின் உரையாடல் இவர்களுக்குப் புரியவில்லை. இவர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்த மக்களாக இருந்திருக்கலாம் எனக் கருதி அவர்களைப் பின்தொடர்ந்த போது ஒரு பெரிய நகரமே கடலுக்கு அடியில் இருப்பதைக் கண்டனர். அதன் கட்டிட அமைப்புகள் தென் இந்தியக் கோவில்களைப் போல் இருந்தன. சுவர்களில் புரியாத மொழியில் எழுத்துகள் கற்களில் பதிவாகி இருந்தன. அவை சில தமிழ் எழுத்துக்கள் போன்றவை.

அந்தப் பதிவுகளைப் படம் பிடித்து மேலும் மொழி ஆராய்ச்சி செய்யத் தீர்மானித்தார்கள். தென் இந்தியக் கோவில் தோற்றமுள்ள கட்டிடங்களுக்குள் சென்று பார்த்தபோது அவர்கள் சிவன் பார்வதி சிலைகள் இருக்குமென எதிர்பார்க்கவில்லை. இந்து மதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததைக்கண்டு பெருமைப்பட்டனர்.

கவிதை வடிவில் கற்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அந்த நகரில் வாழ்ந்தவர்கள் கல்விமான்களாக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். முதலாம் தமிழ்ச்சங்கமானது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததற்கான ஆதாரம் கிடைத்ததையும் எண்ணிப் பெரும் ஆனந்தம் அடைந்தனர்,

ஆழ்கடலில் இருந்த பாசிபடர்ந்த நகரத்தில் காணப்பட்ட அழகான கட்டிடங்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் கட்டிடங்கள் கற்கட்டிடங்களாகவே இருந்தன. கோயில் கட்டிடக்கலை தற்போதைய கலை போல் இருந்தது. கற்சிற்பங்கள் பல பரத நாட்டியக் கலையையும் ஆட்சி செய்த மன்னரையும் பிரதிபலித்தன. மன்னரின் சிலையின் கீழ் அவரது பெயரும் பூர்வீகமும் சாதனைகளும் அக்காலத்தில் இருந்த மொழியில் பதிவாகி இருந்தன. யாழ், மிருதங்கம், ஊதுகுழல் போன்ற இசைக் கருவிகள் இருந்ததைக் கண்டு அக்கால மக்கள் இசையிலும் வல்லுனர்களாக வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டியது. ஒரு பெட்டிக்குள் ஏட்டுச் சுவடிகள் இருந்தன. அண்ணாமலைக்கு ஏட்டுச் சுவடிகளைக் கண்டதும் ஒரே ஆச்சரியம். கைகளைத் தட்டி ஆரவாரப்பட்டார்.

அந்த நகரம் இருந்த பகுதியில் இருந்து நூறு மைல் கிழக்கே சென்றபோது 7௦௦ மைல் நீளமுள்ள இரு நதிகள் இருந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டன.
“நான் நினைக்கிறேன், இவை இரண்டும் பஃறுளியும், குமரியுமாக இருக்கலாம்” என்றார் தேவநேயர்.

ஆராய்ச்சியாளர்கள் கடலுக்கு அடியில் கண்ட மலைகள் இரண்டு. உடனே குமரிக்காண்டத்தின் அமைப்பு பற்றித் தெரிந்த தேவநேயர் “இவை இரண்டும் குமரிக்கோடு, மணிமலைகளாக இருக்கலாம்” என்றார். அவர் சொன்னதை அண்ணாமலையும் ஆமோதித்தார்.

அல்பேர்ட்டும், மாலத்தீவு ஹசன்னும் கடலில் ஆழத்துக்கு நீந்திக் கடலுக்கடியில் மூன்று நகரங்களைக் கண்டுபிடித்தனர்.

“ஐயா இவை மூன்றும் என்ன நகரங்களாக இருக்கும்?” அல்பேர்ட் தேவநேயரை கேட்டார்.

“எனக்குத் தெரிந்த மட்டில் இவை தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் ஆகிய நகரங்களாக இருக்கலாம்” என்றார் தேவநேயர்.

“நானறிந்த மட்டில் குமரிக்காண்டத்தில் 49 பிரதேசங்கள் இருந்தன” என்றார் அண்ணாமலை.

ஒருவருட ஆராய்ச்சியில் சேகரித்த ஆதாரங்களோடு இந்தியா திரும்பினார்கள். குமரிக்கண்டம் பற்றிய அறிக்கையை அதில் பங்கு பற்றிய நாடுகளுக்குச் சமர்ப்பித்தனர். அறிக்கையில் குமரிக்கண்டம் கடலுக்குள் மூழ்குவதற்கு மூன்று சாத்தியக்கூறுகளைச் சொன்னார்கள்.
1. தென்துருவப் பனிமலைகள் உருகிக் கடல் நீர் மட்டம் உயர்ந்ததால்
2. கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் உருவாகிய சுனாமியால்
3. விண்கல் இந்து சமுத்திரத்தைத் தாக்கியதால்
4. எரிமலை வெடித்ததால்
5. கண்டங்களின் அசைவினால்
இதில் முதலாவது சாத்தியக்கூறே தங்களின் கணிப்புப்படி குமரிக்கண்டம் கடலுக்குள் மறைவதற்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம் என்றார்கள் தமது அறிக்கையில்.

******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் – கனடா) (23-Apr-17, 7:18 pm)
பார்வை : 465

மேலே