மர்மத்தின் பக்கம் - தொடர்கதை- பாகம் 4
பாகம் 3ன் தொடர்ச்சி......
பெட்டிக்குள்......
டேவிட்: சரி. ஹக்கூவைக் கொல்வதற்கு நாங்கள் எவ்வகையில் உனக்கு உதவ முடியும்? சொல்
சூனியக்காரி: அதற்கு எனக்கு ஜார்ஜின் உடல் மட்டுமின்றி உனது உடலும் தேவை
ராபர்ட்: எதற்காக என் அண்ணனைத் துன்பப்படுத்துகிறாய்? அவருக்குப் பதிலாக என் உடலை எடுத்துக்கொள்
டேவிட் அதற்கு வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான்.
ராபர்ட்டின் உடலுக்குள் சூனியக்காரி இறங்கி விட்டது.
சூனியக்காரி: ஹக்கூ!!!!!! ஹாஹாஹா. நான் உன்னைக் கொல்ல வந்துகொண்டே இருக்கிறேன். பரலோகம் செல்லத் தயாராக இரு.
சூனியக்காரியின் மந்திரத்தால் அவன் எங்கு இருக்கிறான் என்பதற்கு ஒரு வழி பிறந்தது. ஒரு சீன வரைபடத்தின் மீது தன் மந்திரத்தைப் பயன்படுத்தி அவன் ஹாங்காங் என்ற இடத்தில் தான் இருக்கிறான் என்பது தெளிவானது.
அப்போது, டேவிட்டின் கண்ணிற்கு ஒரு செந்நிறப் புள்ளியை மத்தியில் கொண்ட ஒரு விசில் தெண்பட்டது. அதனை அவன் சூனியக்காரியிடம் காண்பித்தான்.
சூனியக்காரி: ஏய்! ஒரு குழந்தை விசிலை எதற்கு என்னிடம் காட்டுகிறாய். ஒரு ஓரமாகப் போட்டு விட்டு வா!
டேவிட் அதனை ஓரமாகப் போட்டுவிட்டான்.
அன்றிரவே அவர்கள் அனைவரும் ஹாங்காங்கிற்குச் செல்ல ஆரம்பித்தனர்.
ஹாங்காங் நகரத்தின் வாயிலில், இரு குழந்தைகள் ஒரு சிறிய சேனையுடன் அவர்களை வழிமறித்தன.
குழந்தைகளில் ஒருவன் ஜாங் ஹாங், மற்றும் அவள் தமக்கை ஹியாங் வாங்.
ஜாங் ஹாங்: யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?
சூனியக்காரி: எனக்கு ஹக்கூ என்ற மந்திரவாதியின் வீட்டைக் கண்டறிய வேண்டும்.
ஹியாங் வாங்: அப்படியென்றால் இறந்துபோக வேண்டும் என்று சொல்
சூனியக்காரி புரிந்துகொண்டாள். அவர்கள் ஹக்கூவின் வம்சம் தான் என்று.
சூனியக்காரி: ஓ.. அப்படியா? சரி உங்கள் இருவரில் நான் முதலில் யாரைக் கொல்ல வேண்டும்? நீங்களே
சொல்லுங்கள்.
ஜாங் ஹாங்: அதற்குள் உன்னை எங்கள் மந்திர சேனை வீரர்கள் கொன்று விடுவார்களே.
சண்டை ஆரம்பித்தது.
முதலில் நன்றாகத் தாக்குப்பிடித்த சூனியக்காரி, பிறகு வலிமை இழக்க ஆரம்பித்தாள்.
ஒரு மந்திர அஸ்திரத்தால், சூனியக்காரியை மயக்கமடையச் செய்தனர் சேனை வீரர்கள்.
ஒரு மந்திர சக்தி, சூனியக்காரியை இழுத்துக்கொண்டு ஒரு இருண்ட குகைக்குள் தள்ளியது. அவ்விடத்தில், அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அதே நேரத்தில், டேவிட் கைது செய்யப்பட்டான். ஜார்ஜின் ஆவியும் ஒரு மந்திர வார்த்தையால் கைது செய்யப்பட்டு, டேவிட்டுடன் சிறையில் அடைக்கப்பட்டது.
திக்! திக்! என்ற நிலையில் குகையில் தவித்தாள் சூனியக்காரி.
அந்தக் குகையில்............
அடுத்த பாகம் விரைவில்....................