காதல் மட்டுமே மாற்றிவிடும் - நீ நானாய் நான் நீயாய்
காதல் மட்டுமே மாற்றிவிடும் -
நீ நானாய்!
நான் நீயாய் !!
என் வேகம் நீ!
உன் தேகம் நான் !!
என் ராகம் நீ!
உன் பாவம் நான்!!
என் மேகம் நீ!
உன் வானம் நான்!!
என் கோபம் நீ!
உன் தாபம் நான்!!
என் பாக்கள் நீ!!
உன் பூக்கள் நான்!
என் விழிகள் நீ!
உன் மொழிகள் நான்!!
என் இமைகள் நீ!
உன் சுமைகள் நான்!!
என் துடிப்பு நீ!
உன் மதிப்பு நான்!!
என் நெருப்பு நீ!
உன் பொறுப்பு நான்!!
என் உலகம் நீ!
உன் திலகம் நான்!!
காதல் மட்டுமே மாற்றிவிடும் -
நீ நானாய்!
நான் நீயாய் !!

