காதலைத் தேடி
...........பல்லவி.........
இது கவிதை எழுதும்
புது காதல் பயணம்
என் வாழ்க்கை மாறுமா?
புது வசந்தம் திரும்புமா?
காதல்...நீ தான்
தேடல்...உனக்குள்
தொலைவோம் நமக்குள்...
(இது கவிதை எழுதும்..)
சரணம்-01
பார்வைகள் போதுமா
மௌனங்கள் பேசுமா
நினைவுகள் நீங்குமா
என் காதலும் வாழுமா
உன் கால்தடம் சேருமா??
(இது கவிதை எழுதும்..)
சரணம்-02
கனவுகள் நடக்குமா
கைவிரல் சேருமா
வானிலை மாறுமா
என் வானவில் தோன்றுமா
உன் காதலும் கிடைக்குமா??
(இது கவிதை எழுதும்...)
-உதயசகி-