தமிழும் கவியும்

கன்னித் தமிழ் மீது
சற்று காதலுண்டு ....
கவித்துளி மீது
சொட்டு மோகமுண்டு ...

கவிதையும்
காற்று போலத்தான் ...
இனிமையானது ...

தமிழும்
தாய் போலத்தான் ...
இன்றியமையாதது ....

கவிதை ஓர்
அழகியல் ....

தமிழ் என்
உயிர்-இயல் ...

அன்பை கூற ...
அறிவை தேட ...
பண்பை பகிர ...
நேசத்தை நெகிழ ...
தமிழை தட்டி பார்க்கிறேன்...
கவிதையை கொட்டி தீர்க்கிறேன் ...

எழுதியவர் : (25-Apr-17, 9:53 pm)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 109

சிறந்த கவிதைகள்

மேலே