பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இமைக்காத பொழுதுகளில் உறைந்திருக்கும் நாளிகைகளை
உனக்காய் உரித்தாக்கிடவே இன்றைய உறக்கம் தொலைத்தேன்...

அவனியில் ஆயிரம் அவதாரங்கள் அடுத்தடுத்தாய் பிறப்பினும்
ஆழ்மனதில் சூழ்ந்துகிடக்கும் அதிசயப் பெண்ணொருத்தி நீயாவாய்...

நித்திரை கொண்டாயா சித்திரைச் செங்கொடியே..?
முத்திரை தொலைத்தவன் முதலாய் வாழ்த்துகிறேன்...!

" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (25-Apr-17, 10:15 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 53

மேலே