வாழ்க்கையின் பக்கம்
வறுமை எனும் வாடிய பயிரை விதைத்து
பணம் எனும் தூக்கு கயிறை மாட்டி
மனிதனை அழவைத்து அன்பை மறைத்து
ஆசையை தூண்டி பாதாள குழியில் இறக்கி
பாதி வழி தெரியாமல் ஏனடா என்று நினைக்கும்
என்னை ஏக்க செய்து வாசம் அற்ற மலரை போல
வாட செய்து முயற்சி எனும் கயிறை கொண்டு ஏறும் போது
பல முட்டு கட்டைகளை போட்டு முடனாய் வாழ செய்து
வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் இருப்பதே வாழ்க்கை

