அவளோடு நான்
நேர்கொண்ட உன் பார்வை என்னை தாக்கும் என்று பூமி முகம் பார்க்கும் வாழை மரம் போல் செல்கிறாய்.
அருகில் கடந்து போகையில் மின்னொளி பார்வை வீசுகிறாய்.
என் தாகம் அறியும் உன் நெஞ்சத்தை என்னவென்று சொல்ல..
அவ்வவ்போது உன் விரல்கள் என் உதட்டில் உரசி மின்சாரம் பாய்ச்சுவாய் என் பசி ஆற்றும் வேளையிலே.
ம்ம் கொட்டும் அழகில் உன் காதணிகள் ஆடும் பரதம் என்ன ஒரு அபிநயமோ..
நேர்த்தியான உடைகளினால் உள்ளம் கவர்ந்தாய்.
நெற்றி தொடும் உந்தன் கூந்தல்.
அன்பே nee இல்லாமல் காற்றும் சுவாசிக்க மறுக்கிறது.