அன்பில்லா உலகமே நரகமாகிறது
அதிகாரம் கொண்டு ஆணவமாய் வாழும் உலகில் அன்பைப் பற்றியே போதிக்கச் சித்தம் கொள்கிறேன் அன்பே...
பேராசை கொண்ட மனதால் எழுந்த அதிகாரம் நற்பண்புகளால் நிறைந்த மனதால் அன்போடு ஏற்பதாலே அன்பானது அங்கீகாரமிழந்து உண்மை அன்பானது உப்பில்லா பண்டமாகியது ஆடம்பரம் தேடும் பணக்கார உலகிலே...
போறாமை கொண்டே அழிக்க அணு ஆயுதமும் தயார் நிலையில் வீற்றிருக்க,
ஒரு விசை கொண்டு உலகையே அழிப்பேன் என்ற மனதோடு ஆதிக்கவர்க்கம் நடைபோட ஆதிக்கவர்க்கத்திற்கு எதிராய் பழிக்குப் பழியென்று வீறுகொண்ட தீவிரவாதமும் தலைவிரித்தாட,
இவற்றிற்கிடையிலே அழிக்கப்படுவதும், அடிமைப்படுத்தப்படுவதும் ஒன்றும் அறியாத மக்கள்...
மாநில அரசென்று சில நாய்கள் குலைக்க,
மத்திய அரசென்று சில நாய்கள் குலைக்க,
தனது கடமையைத் தாமே ஆற்ற முன் வராது, பழிமேல் பழி போட்டு பாவங்களில் இருந்து தம்மைத் தாமே காக்க நினைக்கும் மூடர்களே,
உங்களுடைய அன்பில்லா பகுத்தறிவு பயனற்றதே...
அன்பால் பகுத்தறிவின் விழிப்புணர்வைப் பெறாத வரை தாங்கள்,
தங்களால் இயற்றப்படும் தீவினைகளிலே வீழ்ந்து இப்புவியிலேயே நரகத்தை அனுவிப்பீர்கள்...
தயாராகுங்கள் செய்த வினைப்பயனை பெறுவதற்கு...