தொழிலாளி

பூக்காமலே பூக்கும் பூ
முத்துமுத்தாய் மலர்ந்து
சொட்டு சொட்டாய் உதிரும் பூ
பூக்களிலே மிக சிறந்த பூ
நாட்டின் முதுகெலும்பு
உழைப்பு...

எட்டு மணிநேர உழைப்பு
வாழ்க்கையிலே வரும் தழைப்பு
சோம்பலற்ற உழைப்பு அதுவே
புது வசந்தத்தின் அழைப்பு
ஒளியை கண்ட இருளைப்போல
வறுமை ஓடும் உழைப்பினாலே...

ஏமாற்றும் வாழ்க்கை
ஏமாளி வாழ்க்கை
ஏய்ச்சி பிழைக்கும் வாழ்க்கை
ஏட்டை திருத்தும் வாழ்க்கை
என்றும் நிலைப்பதில்லை
உன்னை நம்பும் வாழ்க்கை
உன் உழைப்பை
நம்பும் வாழ்க்கை
என்றும் களைப்பதில்லை ...

தூர்வாரும் தொழிலாளி
சிகை திருத்தும் தொழிலாளி
கட்டிட தொழிலாளி
பயிர் செய்யும் தொழிலாளி
நெசவு செய்யும் தொழிலாளி
சாலை சீர்ப்பணி தொழிலாளி
போன்ற இன்னும் பல தொழிலாளி
இவர்களையெல்லாம் வணங்கும்
நானும் ஒரு தொழிலாளி....

வெட்கப்பட ஒன்றுமில்லை
தொல்லை என்று ஏதுமில்லை
அந்த நாலுபேரின் நினைவும் இல்லை
செய்யும் தொழிலே தெய்வம்
இதைவிட இல்லை வேறுதெய்வம்
ஒற்றுமையுடன் உழைத்து
வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ்வில் உயர்வோம்...

எழுதியவர் : செல்வமுத்து . M (29-Apr-17, 4:04 pm)
Tanglish : thozhilaali
பார்வை : 485

மேலே