பலம் - பலவீனம்

அன்பு ஒன்றே பலம்...
மற்றதெல்லாம் பலவீனம்...

அன்பு கொண்ட சகோதரத்துவமே பலம்...
அன்பில்லா சகோதரத்துவமே பலவீனம்...

அன்பு கொண்ட நட்பே பலம்...
அன்பில்லா நட்பே பலவீனம்...

அன்பு கொண்ட இல்லறமே பலம்...
அன்பில்லா இல்லறமே பலவீனம்...

அன்பு கொண்ட யாவும் பலம்...
அன்பில்லா யாவும் பலவீனம்...

அன்பே ஒழுக்கமாகி வார்த்தைகளின் தன்மையைத் தீர்மானித்து, செயல்களை நெறிப்படுத்துவதால் அன்பே பலமாகிறது...
அன்பு நெறி தவறும் போதும் ஒழுக்கம் தவறி அதுவே பலவீனமாகிறது...

உண்மையில் அன்பானவர்கள் வறுமையில் வாழ்ந்தாலும் நேர்மையானவர்களாகவே இருப்பார்கள்...
அன்புக்கு ஏமாற்றத் தெரியாது உள்ளத்தை அறியும் உணர்திறன் இருப்பதால்...
அன்புக்கு ஏமாறும் அவசியம் கிடையாது எதிர்பார்ப்பேதும் இல்லாததால்....

அன்பே ஒற்றுமையாக வாழ வழி செய்வதால் அன்பே பலம்...
அன்பில்லாமல் பொறாமையும், கோபமும் ஒற்றுமையை அழிப்பதால் அதுவே பலவீனம்....

எங்கும் எதிலும் அன்போடு இருத்தலே பலம்...
அன்பைத் தவிர்த்தலே பலவீனம்...

அன்பே அன்பை உணரும் பக்குவம்...
அன்பாக வாழ்வதே உண்மையில் வாழ்க்கை எனப்படும்...

அன்பே பலம்...
அன்பு இன்மையே பலவீனம்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (29-Apr-17, 7:06 pm)
பார்வை : 1063

மேலே