தாய்-சேய்
![](https://eluthu.com/images/loading.gif)
பிறப்பு செய்தி கிடைத்ததும்
"ஆணா பெண்ணா?" எனும் கேள்வி மறைந்து
"தாய் சேய் நலமா?" எனும் கேள்வி தோன்றும் நாள் என்று வருமோ????
பிரசவத்தின் சமயம்
ஈருயிர் பிறக்கிறது.
ஓருயிர் முதன்முதலாய் ஜனனத்தை ருசிக்கிறது,
மற்றொரு உயிர்
மறுஜென்மம் எடுப்பதுபோல்
துடிதுடிக்கிறது...
இந்த அதிசயத்தை
உலகம் உணர்ந்துகொள்ளும்
நாள் என்று வருமோ???
பிறப்பிலேயே வேற்றுமை திணிக்காது
இறப்புவரை ஒற்றுமை உணர்வு கொள்ளும் நாள் என்று வருமோ???