நன்றிகள் பல

நன்றிகள் பல....
என்னை கருவாய் உருவாய்
தாங்கிய என் தாயின் கருவறைக்கு.....

நன்றிகள் பல.....
என்னை மார்பிலும் தோளிலும்
தாங்கிய என் தந்தையின் அன்புள்ளத்திற்கு.....

நன்றிகள் பல....
என்னை அடித்தும் அரவணைத்தும்
கல்வி புகட்டிய என் ஆசானுக்கு....

நன்றிகள் பல....
என் படிப்பிற்கும் திறமைக்கும்
ஏற்ற வேலை கொடுத்தவருக்கு.....

நன்றிகள் பல....
என் இன்ப துன்பங்களை
பகிர்ந்து கொண்டு என்னோடு
நட்போடிருக்கும் நண்பர்களுக்கு.....

நன்றிகள் பல....
என் இதயத்தில் நிறைந்து
என் உயிரோடு கலந்த என் மனைவிக்கு.....

நன்றிகள் பல......
என் அணுவிலே உயிராய் உதித்து
என் அன்பிலே நிறைந்த என் மகளுக்கு....

நன்றிகள் பல....
என் சிந்தனையிலும் செயலிலும்
நிறைந்திருக்கும் என் இறைவனுக்கு.....

போதாதது தான்...
எத்தனை கோடி நன்றிகள் கூறினாலும்
அவர் எனக்கு தந்த இந்த வாழ்விற்கு......

இருப்பினும் நன்றிகள் பல
என் இறைவனுக்கு....!

எழுதியவர் : நித்யஸ்ரீ (30-Apr-17, 11:31 am)
Tanglish : nanRikaL pala
பார்வை : 889

மேலே