வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம்!
வாழும் நாட்கள் கொஞ்சம்,
நடக்கும் சம்பவங்கள் அதை மிஞ்சும்!

தேவையானதை அவசியமாய்,
தேவையற்றதை அலட்ச்சியமாய்,
குறிக்கோளை இலட்ச்சியமாய்,
சம்பவங்களை தணிக்கை செய்தால் நெஞ்சம்,
சாதனைக்கு இருக்காது பஞ்சம்!

போட்டி மிகுந்த உலகம்,
ரகசியத்தை அறிய கெஞ்சும்!
சிதம்பர ரகசியமாய் எண்ணும்,
இவ்வளவுதானா என்று தோணும்,
வெற்றியின் ரகசியம் தெரிந்ததும்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (30-Apr-17, 11:49 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : Vettriyin ragasiyam
பார்வை : 217

மேலே