தந்தேன் உன்னிடம் என்னை 555

அழகிய தீயே...

யார் நீ
எங்கிருந்து வந்தாய்...

என்னை உரசிவிட்டு என்னிடம்
ஏன் மன்னிப்பு கேட்டாய்...

தென்றலாக தழுவினாயா
தீயாக என்னை உரசினாயா...

பூவில் இருந்துவந்த புயலா
புல்லாங்குழலில் வந்த இசையா...

எனக்காக வீசி செல்லடி
ஒரு விழிப்பார்வை மட்டும்...

உன்னை நான் மீண்டும்
காணும்வரை...

என் அழகிய தீயே...

கண்டேனடி எனக்கானவள்
நீதானென...

என்னை மறந்தேன்
தந்தேன் உன்னிடம் என்னை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Apr-17, 8:13 pm)
பார்வை : 247

மேலே