பாருக்குள்ளே நல்ல நாடு

பழமை நிறைந்த நாடு –பலர்
பார்த்து மகிழ்ந்த நாடு !
இளமை கொண்ட நாடு –நல்
இனிமை பொங்கும் நாடு !

மதங்கள் வளர்த்த நாடு –பெரும்
மகிழ்வைத் தந்த நாடு
உதவி செய்யும் நாடு –நல்
உயர்வைப் பெற்ற நாடு .

அகிம்சை வழியில் நின்று –கொடும்
அடிமை ஒழித்த நாடு !
பகிர்ந்து உண்ணும் நாடு –ஒரு
பாசம் பொங்கும் நாடு !

அறிவு சொரியும் நாடு –பல
அண்டம் ஆயும் நாடு !
தெளிவு பெற்ற நாடு –பல
திறன்கள் கொண்ட நாடு !

அன்பு நிறைந்த நாடு –பிறர்
அழிவை பழிக்கும் நாடு
வம்பு கொண்டு வந்திடின்-அவர்
வாலை அறுக்கும் நாடு !

அமைதி வழியில் சென்றிட –தினம்
ஆர்வம் கொண்ட நாடு !
இமைகள் போன்று மக்களை –தினம்
இணைந்து காக்கும் நாடு !

உலகம் போற்றும் நாடு –பல
உயர்வு பெற்ற நாடு!
உலகை ஆளும் நாடு –எனும்
உவகை கொண்ட நாடு !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (30-Apr-17, 10:00 pm)
பார்வை : 1181

மேலே