நாற்று நடுமுழவன் நெஞ்சினில் மென்சாரல்
மேற்குமலை ஓரத்தில் ஒர்வெள் ஒளிமின்னல்
கீற்றின் வெளிச்சத்தில் கார்முகில் கொண்டாட்டம்
நாற்று நடுமுழவன் நெஞ்சினில் மென்சாரல்
ஆற்றின் அலையில் இனிய தமிழ்ப்பாடல்
காற்றில் கவின்மழைஆ டல்
ஒரு விகற்ப பஃறொடை வெண்பா !
----கவின் சாரலன்