அக்னி நட்சத்திரம்

ரத்தமும் நித்தம் கொதிக்கிறது
பத்தவைத்த காட்டில் எரியும் தீ போல

கண்ணீர் கன்னங்களை கழுவுகின்றன
வெந்நீர் தழுவிய பச்சிலை போல

பொய்களை உரைத்த அவள் பாவியா?
உண்மைகளை மறைத்த அவர்கள் பாவிகளா?

அந்த பாவிகள் குளிர்காய
இந்த அப்பாவி எரிந்து போனாளே..

நெருப்பு தீயால் எரித்திருந்தால் பொறுத்திருப்பாள்
வெறுப்பை உமிழ செய்யும் காமத்தீயால் எரித்தால்
அவள் என் செய்வாள்?

துயிலா இரவுகள்!!
மீளா துயரங்கள்!!
புலரா விடியல்கள்!!
மலரா புன்னகைகள்!!

நடை பிணமாய் இன்று
நிரந்தர பிணமாய் மாறும் நாள் என்று?
தேடுவது என்னவென்று தெரியாமலே
தேடி தேடி சொல்கிறாளே...

என்றோ போயிருக்கும் உயிரை
இன்றும் பிடித்து வைத்திருக்கிறாள்...

வெறுமையால் சோதித்த அவளை
திறமையால் சாதிக்க அவள் செல்கிறாள்
உலகம் என்னும் விந்தையை எதிர்த்து..

எழுதியவர் : ஷாகிரா பானு (3-May-17, 10:36 am)
Tanglish : akni natchathiram
பார்வை : 2387

மேலே