வறுமை

தென்றல் காற்றாக என்றேனும்
வசதி என்னிடம் வீசுமா?! என்று
எதிர் பார்த்தேன்!
ஆனால்
என்றுமே என்னை மட்டும் தீண்டும்
வாடைக் காற்றாக வறுமை என்னை
தீண்டிச் செல்கின்றது!!,

நானும் வறுமையும் என்ன
ஒரு பிறப்பா?!
இல்லை
இருவரும் ஒரு குலமா?!
என்றுமே என்னை விட்டு போகமல்
என்னுடன் சேர்ந்தே வருகின்றதே!,

வறுமையை விட்டு நான்
விலக நினைத்தாலும்
என்னை விட்டு ஏனோ
விலக மறுக்கின்றது வறுமை,

வாடும் மலராக இருப்பினும்
என் வாழ்வில்
என்னை விடாமல் விரட்டி வருகின்றது
வறுமை...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (3-May-17, 11:30 am)
Tanglish : varumai
பார்வை : 139

மேலே