மறக்க முடியாத குழந்தை பருவம்

சிறுவனாய் இருந்த போது, பள்ளிக்கூடத்தில் செய்த குறும்புகள் ஒவ்வொன்றும் இன்னும் பசுமை மாறாத நினைவுகளாக புன்னகையைப் பூக்கச் செய்கின்றன செம்பருத்தி பூக்களாய்..

காண்போரெல்லாம் இரசித்துப் பாராட்டினர்,
சிரித்து மகிழ்ந்தனர்...

ஐவரைக்கொண்ட சிறு பட்டாளம் அது...
ஆண், பெண் வித்தியாசம் தெரியாத கூட்டம் அது..

குறும்பு செய்வதோடல்லாமல் அதிலிருந்து எளிதாக புன்னகைத்தே தப்பிக்கும் கூட்டம் அது...
சக மாணவிகளுடன் குடும்பி பிடித்து சண்டையிட்ட கூட்டம் அது..

ஆசிரியர்கள் திட்டும் போது, சிரித்துக் கொண்டே கோபம் சிறிதுமில்லாமல் கைகட்டி நிற்கும் கூட்டம் அது..
அக்கூட்டத்திலே ஒற்றுமையும், அன்பும் நிலைத்திருந்தது..
ஆதலால் பிரச்சனையென்றால் காட்டிக் கொடுப்பதோ, தனித்துவிட்டு ஓடுவதோ நிகழ்ந்ததில்லை..

குறும்புகள் செய்தாலும் அந்த ஐவரும் உண்மையை மட்டுமே கூறுவரென்பதால், ஆசிரியர்களெல்லாம் அன்பு கொண்டிருந்தனர் அந்த ஐவரின் மீது..

ஐவரென்றால் சகோதரர்கள் அல்ல.
ஆனால், அவர்களின் நட்பு உறுதியானதாக இருந்தது இரும்பை விட..

ஆனால், காலம் பிரித்தது ஐவரையும்..
சந்தோஷமும் தொலைந்தது..
இன்று அந்த ஐவரும் சந்தித்தாலும் நலம் விசாரிப்போடு முடிகிறது அச்சந்திப்பு....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-May-17, 10:09 am)
பார்வை : 3078

மேலே