என்னவள் 11 ~அர்ஷத்
~பெரும்பாலான
நமது ஊடல்கள்
கரையேறுவது
இந்த கடற்கரையில் தான்..
~இந்த
கடல் நீராய்
உப்பு கரிக்கிறது
நீ இல்லாத நிமிடங்கள் ...
~நீ காதில்
வைத்த சங்கை
என் காதில் வைத்தேன்
அதில் கேட்டது
காதல் சத்தம் ...
~மிளகாய் பஜ்ஜி
காரம் என்றாய்
இது இனிக்கிறது
என்றது மிளகாய் பஜ்ஜி
என்னிடம்...
~இந்த
பஞ்சுமிட்டாயை
போல சிவக்கிறாய்
நானாக நெருங்குகையில் ...
~கொஞ்ச நேரம்
இங்கே வந்து நில்
அலைகள் கால்நனைத்து
கொள்ளட்டும் ....
~மூச்சு முட்ட
முத்து குளிக்கிறேன்
உன் காதலிலே ...
~எனை உனக்குள்
இழுத்துச்செல்வதால்
நீயும் பேரலையே ...
~உன்னை
இந்த கடற்கரையில்
பார்த்த யாரோ ஒருவன்தான்
கடல் கன்னி கதையை
உருவாக்கியிருக்க கூடும் ...