ஹைக்கூ முயற்சி 7

திறந்து தேடினான்
தொலைந்து போனான்
"புத்தகம்"...!

கதவைத் திறந்தால்
வாழ்க்கையைக் காட்டுகிறது
புத்தக சாளரம்....!

வாங்கியவனுக்கு தெரியவில்லை
கறையானுக்கு தெரிகிறது
புத்தக ருசி....!

கன்னித்திரை திறவாமல்
செல்லரித்துப் போகும் தேகம்
வாசிக்கப்படாத புத்தகம்....!

ஆயிரம் சூரியன்கள்
அழகாய் அடுக்கப்பட்டுள்ளன
நூலக அலமாரி....!

ஒவ்வொரு தோண்டலிலும்
புதையல் தருகிறது
புத்தகம்....!

பெரியாரும் பிள்ளையாரும்
முத்தமிட்டுக் கொள்கிறார்கள்
புத்தக அலமாரியில்...!

பிரசவிக்குமுன்னே
இறந்து விடுகிறது
சில கற்பனைகள்....!

பெரு வெளிச்சத்தில்
சிறு இருள் தேடுகிறான்
புது எழுத்தாளன்...!

அமைதியாய் உருவாக்குகிறது
ஆயிரமாயிரம் புரட்சியாளர்களை
நூலகம்....!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (7-May-17, 3:14 pm)
பார்வை : 274

மேலே