தேர்வறை

கடக்கும் நேரம்
மெல்ல ஆக்கிரமிக்கப்படுகிறது
இருக்கை நுனி

தேர்வறை
திருதிருவென விழிக்கிறது
ஜன்னலருகே புறா

தேர்வறையில் சுழலும் மின்விசிறி
மேசையில் விழுகிறது
வியர்வைத்துளி

புரியாத கேள்வி
விடைத்தாளில் விழுகிறது
ஒரு தலைமுடி

எதிர்பாராத நேரம்
தலை உடைக்கிறது
பென்சில்

அடிக்கடி திரும்பும் மாணவன்
சீண்டிக் கொண்டிருக்கிறது
திரைச்சீலையை காற்று

அதிகரித்த பதற்றம்
தலை புரண்டு விழுகிறது
எழுதுகோல்

தேர்வு முடித்த மாணவன்
அழுத்தம் குறைந்து மறைகிறது
இருக்கையில் தடம்

தேர்வறை
வேகத்தை கூட்டுகிறது
பார்த்த நொடிமுள்

தேர்வறையில் அமைதி
நிரம்பி வருகிறது
விடைத்தாள்

எழுதியவர் : கி. கவியரசன் (8-May-17, 4:27 pm)
பார்வை : 162

மேலே