என் அன்பு தோழி

இந்த கடல் அலைக்கும்
மணல் கடைக்கும்
தெரியாது
நாம் நண்பர்கள் என்று. ....
பூ விற்கும் பாட்டிக்கும்
சுண்டல் விற்கும் தம்பிக்கும்
தெரியாது
நாம் நண்பர்கள் என்று. ....
நடந்த மணலுக்கும்
கடந்த உறவுக்கும்
தெரியாது
நாம் நண்பர்கள் என்று. ....
சமுகத்தின் பேர்வைக்கும்
கிடப்பார் பார்வைக்கும்
தெரியாது
நாம் நண்பர்கள் என்று. ....
ஆண் பெண் நட்பின்
அழுக்கும் இல்லை
உன் தோல் சாய எனக்கு
தயக்கம் இல்லை
துவண்டால் வருவாய்
தோழியாய் நீயும்
கண் கலங்க கறைவாய்
தாயாய் நீயும்
நீயே நட்பின் எல்லை
உடைத்தாய் அன்பால்
காதல் சொல்லை
உன்னை போல அன்பு
வைக்க யாரும்
இல்ல.......
ஊர் வைத்த அனாதை
பெயரும் உன்னால்
இல்ல.......