உள்காயமானதடி தோழி
அன்பு தோழி .....
வட்டம் போட்டு வாழ்கிறாய்
என என்னி இருந்தேன்
திட்டகுழியில் கட்டிகிடக்கிறாய்
என இன்று உனர்ந்தேன்
ஆசைகள் எரித்து
அனைத்தும் பொறுத்து
மெழுகாய் எரிகிறாய்
கிடைக்காத அனைத்தும்
பிடிகாதென சொல்லி
மெல்ல சிரிக்கிறாய்
அனைத்தும் மறைக்கிறாய்
மரத்துப் போன உன்
வலிகள் சொல்ல
தூரம் சென்றது
என் உயிரும் மெல்ல
உன் காயம் கண்டநொடி
உள் காயமானதடி
- உன் அன்பு தோழி