பழைய கனவு

முகமெல்லாம்
கண்ணீர்
வரவழைத்தாய்

என் மூச்செல்லாம்
உன் பேச்சாய்
மாறியது

சுகந்திரம்
என்று
சிறைபிடித்தாய்

பசிக்கு
பசி
உணவளித்தது

என் இரவை
சூரியன்
தின்றது

என் பகலை
நிலவு
வேடிக்கை பார்த்தது

என் பாவம்
உன்னை
சுமந்தது

உன் நுகர்வை
விரும்பி
வெறுத்தேன்

உன் தீயில்
என்னை
நனைத்தாய்

ஓய்ந்து
வாழ்ந்தேன்
உன்னோடு..

எழுதியவர் : Kadhal (9-May-17, 5:02 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : pazhaiya kanavu
பார்வை : 65

மேலே