மறையுமோ உன்னிதழ் மின்னல் கீற்று

ஆகாய வெளியிலே தென்றல் காற்று
அழகிய உன்னிதழ்களில் வெண்புன்னகை கீற்று
வேகமாய்ப் போகும் முகிலிடையே உன்னைக் கண்ணுற்று
வெட்டி வெட்டி ஒத்திகை பார்க்குது மின்னல் கீற்று !
முகில் பொழிந்தபின் மின்னல் கீற்று எங்கு போயிற்று ?
பொழிவது நிறுத்தா கவிமுகில் நான் பொழியப் பொழிய
மறையுமோ உன்னிதழ் மின்னல் கீற்று ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-May-17, 9:45 am)
பார்வை : 115

மேலே