செவிலி தாய்க்கு வாழ்த்து
"நெகிழ வைத்த நிஜங்கள்"
Hospitalக்கு 70 வயது அப்பாவ கூட்டிவந்து அட்மிட் பண்ணாங்க. கொஞ்ச நேரத்துல பெரியவர் vomiting motion 2 போயிட்டார்.
அவரோட புள்ளையும் மருகளும் இந்த பெரியவர முகம்சுளிக்கிறாமாதிரி திட்டிடாங்க. இவரை பாத்ரூம் கூட்டிட்டு போககூட தயங்குராங்க.
அந்த மகன்கிட்ட சொன்னாலும் அவர் பக்கத்துலகூட போகாம மூக்க புடிச்சிகிட்டுதிட்டிகிட்டே இருந்தான்.
உடனே 2 நர்ஸ் வந்து க்ளின்பண்ணி பாத்ரூம் கூட்டிபோய் குளிக்கவச்சி கூட்டிபோய் பெட்ல படுக்க வச்சாங்க.
இத்தனைக்கும் அந்த பெண்களுக்கு 20 24 வயசிருக்கும். கொஞ்சம்கூட முகம்சுளிக்கல.
அது அவங்க வேலைனு ஒதுக்கிவிடமுடியாது. இரத்த பாசத்தவிடவா கடைமைல பாசம் வந்திடும்.
ஆனா நம்ம நாட்ட பொருத்தவரைக்கும் செவிலியர்கள் மருத்தவர்களுடன் தகாத நடத்தையை வைத்துக்கொள்வார்கள் என்று திரை படங்களிலும் பத்திரிக்கைகளில் ஜோக்குகளாகவும் கொச்சை படுத்தி கொண்டே இருக்கிறோம்.
அவர்களின் உலகில் பாசம் என்ற தாய்மை தெரியும்.
மருத்துவர்கள் கடவுள் போன்றவர்களா என்பது தெரியாது. ஆனால் செவிலியர்கள் நிச்சயம் தேவதைகள்தான்....
தூய்மையான அன்னை உள்ளம் கொண்ட அனைத்து செவிலித்தாய்மார்களுக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
