கண்ட நாள் முதலாய்-பகுதி-01
......கண்ட நாள் முதலாய்.......
பகுதி : 01
அது ஒரு அழகிய மாலைப்பொழுது... கடலலைகலோடு தன் கால்களை நனைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் நமது கதையின் நாயகி துளசி.கொஞ்சம் சதை போட்ட உடம்பு,ஐந்தடிக்கும் சற்றுக் குறைவான உயரம்,வெள்ளை அப்பினாற் போன்ற மேனி என்று செல்பவர்களை ஒரு தடவையாவது திரும்பிப் பார்த்திடச் செல்லும் அழகு அவளிடத்தில்...
அன்றும் அதே போல் தான் அவளது அழகை தூரத்திலிருந்தே ரசித்துக் கொண்டிருந்தான்
அர்ஜீன். அர்ஜீன் பார்ப்பதற்கு ஆறடிக்கும் சற்று அதிகமான உயரத்தோடு மாநிறத்தில் கவர்ந்திழுக்கும் கண்களோடு தோற்றமளித்தான்.அவனைக் கடந்துசென்ற பெண்கள் அனைவருமே அவனைப் போல் ஒரு அழகன் தங்களுக்கு கிடைக்கமாட்டானா?? என்ற ஏக்கத்தை விழிகளில் ஏந்தி,விட்டால் அவனை பார்வையாலே விழுங்கிவிடுபவர்கள் போல அவனை வைத்த கண் வாங்காமல் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவனது கண்களோ துளசியை விட்டு நகருவேனா என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தன.அங்கே துளசியோ தன்னை ஒருவன் ரசித்துக் கொண்டிருப்பதே தெரியாமல் தன்போக்கில் பாடலொன்றை முணுமுணுத்தபடி கடலலைகலோடு நடை பழகிக் கொண்டிருந்தாள்.அழகிய மாலை வேளை,கொட்டும் மழை,துள்ளியோடும் அலைகள்,இவையெல்லாம் ஒன்றாக கிடைக்கும் போது அதை விட்டு வெளிவர யாருக்குத் தான் மனம் கேட்கும்.துளசி இந்த உலகத்திலேயே இல்லை.அங்கே ஒருத்தன் தன்னாலே இவ் உலகத்தையே மறந்துவிட்டான் என்பதை அறியாது சிறுபிள்ளை போல் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள்....
இந்த மகிழ்ச்சி துளசிக்கு நீண்ட நேரம் நிலைக்கவில்லை.திடீரென அவளை அதிர்ச்சியடையச் செய்வது போல பெரிய சத்தமொன்று அவளது காதருகே கேட்டது.என்னவென்று அவள் ஒருவித நடுக்கத்தோடு திரும்பிப் பார்த்தாள்.அங்கே....
தொடரும்......
இது என் முதல் முயற்சி....உங்கள் கருத்துக்களே என்னை மேம்படுத்தும்.இதில் உள்ள குறை நிறைகளை கருத்திடுங்கள் நண்பர்களே...அது என்னை வளர்த்துக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.