மை

மை.

அறியாமை, இளமை, இருள், களங்கம்
குறிக்கும் மையின் தன்மைகள் ஏராளம்.
முறைமை, மெய்மை நியாயமெழுதும் மை.
தெறிக்கும் அபிப்பிராயங்கள், முறிக்கும் உறவுகள்,
அறிவிக்கும் சரித்திரங்கள், உலகாளும் தகைமைகளை
முரசறையும் மையினாளுமை, பெருமை வல்லமை.

*

தோழமை அன்பின்மை யால் இல்லாமை ஆகும்.
ஆதரவின்மை உலகில் பாரிய வறுமை.
பேசாமை, பாராமை உறவிற்குப் பகைமை.
உரிமை கொண்டுறவைச் சீர்மை செய்வோம்.
இளமை, முதுமை அனுபவங்கள் நன்மை,
பெருமை. சிலரிதைச் சிறுமையெனவும் எண்ணுவார்.

*

கண் மை கவர்ச்சியூட்டும் செழுமை.
பெண்மை இழிவெனும் மடைமை ஒழியட்டும்.
பேதைமை யைப் பெண்கள் வெல்லுதல் அறிவுடைமை.
அறிவின்மையால் கைம்மை நிலைமை தீமை.
ஆண்மை ஆளுதலென்பது பழைமை வழமை.
தகவின்மை தலைமை ப் பதவிக்கு ஏற்புடைமை யல்ல.

*

விரல் மை வாக்களிப்பின் உறுதிப்பாடு.
வசிய மை யால் வெற்றிலை மை யால்
கசியும் பன்மை கதைகள் சோதிடப்புலமை.
வண்ண மைகளால் வரையும் ஓவியங்கள்
கண் பறிக்கும் சிகரதிற்கழைக்கும் பொதுமை.
பசுமை க் கலைகள் புலன்களிற்குக் குளிர்மை.

*

இம்மை மறுமை செம்மை பெற
பொய்மை யாம் கருமை விலகுதல் முழுமை.
ஓற்றுமை உணர்வால் இல்லாமை வேற்றுமை.
பொறாமை யற்ற எளிமை வாழ்வு இனிமை.
குடிமை பெருக்கும் தாய்மை வலிமை.

*

அம்மை அண்மை அஞ்சாமை தரும்.
உவமை யில்லா எழுமை தரும்.
உயர்வு மைகளை தனிமை தெலைக்கும்
இறவாமை த் தமிழில் மையின்றி எழுதிய
தமிழின் அடிமை

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 9-5-2017

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம். டென்மா (15-May-17, 4:07 pm)
Tanglish : mai
பார்வை : 226

மேலே