தாளில் வரையப்பட்ட ஒவியம்

தாளில் வரையப்பட்ட ஒவியம்
*
தங்கச் சிலையாயவள் தாராளமாய்
தாமரையிதயத்திலமர்ந்தாள்
தாளில் வரையப்பட்ட ஓவியமாய்.
தாகம் தீர்க்கிறாள் காவியமாய்.
*
காணுதலெனுமியக்கத்தாலன்பை நீவியும்
ஆசையைத் தூவியும் காதற்
பெருவலியைத் தாவியுமோடச் செய்யலாமிது
காதல் தத்துவம்.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் . 23-4-2017
*