நீயென் கண்ணுக்குள் நிலவே

நீயென் கண்ணுக்குள் நிலவே
(கடைசி வரி:- கண்ணுக்குள் நிலவு)


*

எண்ணுக்குள் எண்ணாய், எழுத்துக்குள் எழுத்தாய்
மண்ணுக்குள் வேராயென் மனதோடு தூராய்
எண்ணுதலிலும் எப்போதும் என்னோ டிருப்பவனே
மண்ணிலே நாமிருவருமெமக்குக் கண்ணுக்குள் நிலவே!

*

அன்பில் நாமொருவருககொருவர் சுமை அல்ல.
இன்ப நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்து
நன்றாகக் கை கால்களையசைத்துத் தெம்பாக
இன்னலற்று இருப்போம் கண்ணுக்குள் நிலவே!

*

உடலில் பல மாற்றமானாலும் எம்முற்சாகப்
படலை திறந்து மனதிலிளமையாய்க் களிப்போம்.
உடலுறுப்புச் செயலின் குறைவே முதுமை.
திடமாயியற்கையோடிணைந்து நல்லுணவோடிருப்போம் கண்ணுக்குள் நிலவே!

*

முதுமைப் பாலத்தில் ஒருவரையொருவர் சார்ந்து
பதுமை போலசைந்து பழகிய வழியினில்
மெதுமையாய் நகருதெம் வாழ்வு திருப்தியாக.
புதுமையல்ல நாமொருவருக்கொருவர் கண்ணுக்குள் நிலவு.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 4-5-2017

எழுதியவர் : பா வானதி - வேதா. இலங்காதில (15-May-17, 5:42 pm)
பார்வை : 188

மேலே