அவளே என் காதலி
நிறைந்த கார்மேகம் வீசி சென்ற
தூறல்கள் அவள் கரும் கூந்தல்கள்......
வானத்து விண்மீனிலிருந்து விழுந்த பாகங்கள்
அவளின் மின்மினி கண்கள்......
சூரியனின் குளிர்ந்த கதிர்கள் தாக்கி
சிவந்தனவோ உதடுகள்....
புலவனும் காதல் கொண்டு பாட்டிசைக்கும்
புன்முறுவல் சிரிப்புக்கு சொந்தக்காரி....
தரையில் விரித்திட்ட நெற்கதிரின் வனப்பு
பொன் ததும்பிய மேனி.....
நீர்ப்புகா செந்தாமரை மலர் - போல்
பகைப்புகா குழந்தை மனம் கொண்டவள்......
தரையில் அவள் நிழலை சுமக்கும் நிலவொளியும்
மென்மையாகிறது அவள் பாதங்கள் சுமப்பதனால்.....
பூக்களும் மாலையாக துடிக்கிறது
அவளின் கழுத்தை அலங்கரிக்க.....
பிரம்மனும் காதலிக்க துடிக்கும்
பிரகாசமானவள் அவளே என் காதலி!!!!!
-மூ.முத்துச்செல்வி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
