கடந்த காலம் மீண்டும் வருமா
எத்தனை நாட்கள்
எதிர்கால ஏக்கத்தில்
ஏச்சும் பேச்சும் பொருட்டாது
ஏமாற்றிருப்பேன்
என்னையே..!
எதிர்கால கனவுக்காக
நிகழ்கால நிமிடங்களை
கனவுகளாக கனாக் கண்டுகொண்டு
கடனென வாழ்க்கையை கழித்துவிட்டு
எதிர்காலத்திற்காக
என்னையே அறியா
ஏங்கி நிற்கிறேன்..!
நிமிடத்தில் நிலைமாறவேண்டுமென
நினைத்து...
நிமிடமொருமுறை
வந்த வாய்ப்புகளை
வாழ்த்தி வழியனுப்பி விட்டு
வராத வசந்தத்திற்காக
வாழ்க்கையை தொலைத்துவிட்டு
வறுமையில் வாடலானேன்..!
வந்திடும் வசந்தமென நினைத்து
வாழ்க்கையை தொலைத்துவிட்டு
வயோதியனாய் நிற்கிறேன்...
வாயிற்படிக்கு வெளியே..!
**************
சிகுவரா
ஆகஸ்டு 2௦௦3 ல் எழுதப்பட்டது.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
