தாலாட்டும் நினைவுகள்

வெஞ்சினம் வேரறுத்து வெண்பனி மனத்தோடு
******பாசத்தின் வலையிற் பலமுறை சிறையிட்டாள்
அஞ்சனம் பூசிய அல்லிமலர் விழிகளில்
******கண்ணீராற் கதையெழுதி சிலநேரங் கோலமிட்டாள்
கொஞ்சும் மைனாப்போற் கொவ்வை இதழ்வழி
******கனிமொழி பேசியே முத்தமழைப் பொழிந்திட்டாள்
மஞ்சத்தில் இமைமூட மருதோன்றி யாய்நெஞ்சம்
******சிவந்து செல்லமகள் நினைவுகளாற் தாலாட்டுகிறாள்......

எழுதியவர் : இதயம் விஜய் (17-May-17, 12:15 pm)
பார்வை : 3598

மேலே