அழகுப்பதுமைகள்

ஆயிரம் கோடி
அழகும் வைத்தான்...
அதற்குள் மர்மமும் வைத்தான்...
அவளுக்கொரு இதயமும் வைத்தான்...
அடிமைகள் ஆயிரம் காவலும் வைத்தான்...

கவிபாடும் கண்களும் வைத்தான்...
கரும்பினிப்பு இதழும் வைத்தான்...
காரியம் சாதிக்க கண்ணீரும் கூடவே வைத்தான்...

இதழுக்கு கீழே மச்சமும் வைத்தான்...
இருப்போரை இமை மறக்கவும் செய்தான்...
இத்தனை வைத்த இறைவனிடம்
‘இயலாமையை’ இலவசமென்று வாங்கிவந்திட்டளோ..?

அழகை ஆராதிக்க தெரியாவனும்
அனுபவித்து...
அலங்கோலமாக்கி...
அடிமையாக்கிக் கொண்டார்கள்.
அடிமை வேஷம் பூண்டிருந்த
ஆண்வர்க்கங்கள்...
‘ஆணாதிக்கம்’ என் பெயரில்...

அதிர்பேச்சுக்கு அடியும்...
அடிபணிந்தால் பத்தினி பட்டமும்...
அள்ளித் தந்திட்டனர்கள்.

அவளும் அதுவே...
ஆனந்தமென...
ஆர்பரித்து...
அமைதியாய்...
அடங்கிக் கிடக்கின்றாள்.

ஆண்டவன்
அழகுப்பதுமையெனும் படைப்பை நிறுத்தும்வரை
அவர்களும் அப்படித்தான் வாழ்வார்களோ..?
சுயமரியாதையை மறந்து..!

******************
சிகுவரா
ஜூன் 2004 ல் எழுதப்பட்டது.

எழுதியவர் : சிகுவரா (17-May-17, 9:01 pm)
பார்வை : 553

மேலே