சரவணன் மீனாட்சி

சரவணன் மீனாட்சி

” இரமா இங்க கிட்டவந்து காதை கொடேன் என்று “ஒரு வாரமாய் குசுகுசுவென பேசுவதும், தீவிரமாக அலைபேசியில் “என்ன அத்தீம்பேர் நீங்க சொன்ன இடத்துல நல்லா பார்த்துப்பாங்களா? வேளைக்கு நல்ல சாப்பாடு போடுவாங்களா, காய்ச்சல், இருமல் வந்தா மருத்துவ வசதி செய்து கொடுப்பாங்களா ? பணம் எவ்வளவு செலவு ஆனாலும் பராவாயில்லை“ மீனாட்சிக்கு ஒரு இடைஞ்சலும் வந்துட கூடாது ”சத்தமாக இப்படி இரமாவும், சரவணன் பேசுவது…. மீனாட்சிக்கு எரிச்சலாகவே இருந்தது.
“எரிச்சலான மீனாட்சி ….. அந்த பாழா போனவன் முன்னாடியே போய்டான், நான் கிடந்து அவதிப்பட வேண்டியதாயிருக்கு…… ஒடம்பு ஒத்தநாடியா போய்ட்டுது, ஏதோ ஒரு கவள சோறு இறங்கினா போதும்கிற அளவுக்கு வந்திடுத்து. நா பெத்தவனும் முன்னாடியே போய்ட்டான். எல்லாருக்கும் போறதுக்கு நாள் வருது, எனக்கு வரலீயே”
நான் இருக்கறது …. இரமாவுக்கும் சரவணனுக்கும் இடைஞ்சலா இருக்கு“ நான் கொடுத்து வைச்சது அவ்வளவுதான், எப்பதான் இந்த உசிர எமன் கொண்டு போக போறானா, சீக்கிரமா வந்து தொலையேண்டா? இப்படி புலம்பல்களாக பிதற்றி…பிதற்றி..அந்த களைப்பிலேயே கண்கள் அயர்ந்து தூக்கத்தில் ஆழ்ந்து விட்டாள் மீனாட்சி
மறுநாள் தூக்கத்திலிருந்து விழித்தவளுக்கு அதிர்ச்சி…..
”டேய் சரவணா எங்கேடா காணோம் மீனாட்சி” என்றாள்.
அவளை உறாஸ்டல்ல சேர்த்துட்டோம், அவ இங்கன இருந்தா சரியா படிக்கமாட்டா…ஆதனால,… நல்ல தரமான உறாஸ்டலா பார்த்துதான் சேர்த்திருக்கிறோம்” என்றனர் இரமாவும், சரவணனும்
”டேய், சின்ன குழந்தைய உறாஸ்டல்ல சேர்த்துட்டு….என்னைய வீட்டுல வைச்சிருக்கியே.. எனக்கும் ஒரு இடம் பாரேண்டா“ என்றாள்
கவலைப்படாதீங்க நீங்களும் என் மகள் மீனாட்சியும், எங்களுக்கு ஒண்ணுதான் என்றனர்.
அதைக்கேட்டதும், ”கடவுளே, அந்த எமராசன மெதுவா…சாகவாசமா வரச்சொல்லு” என்று மனதிற்குள்ளே வேண்டி கொண்டாள் மீனாட்சி பாட்டி!
கவிஞர் கே. அசோகன்.


  • எழுதியவர் : கவிஞர் கே. அசோகன்
  • நாள் : 18-May-17, 9:20 pm
  • சேர்த்தது : கே அசோகன்
  • பார்வை : 380
Close (X)

0 (0)
  

மேலே