பொம்மை
குழந்தைகளிடம் அதிக நேரம்
செலவு செய்பவை
பொம்மைகள்...
குழந்தைகளிடம் அதிக நேரம்
பேசிக் கொண்டிருப்பவை
பொம்மைகள்...
குழந்தைகளின் உற்ற தோழனாய்
கூடவே இருப்பவை
பொம்மைகள்...
குழந்தைகள் எவ்வளவு தான்
அடித்தாலும் கிள்ளினாலும்
சிரித்துக் கொண்டே இருப்பவை பொம்மைகள்..
குழந்தைகள் தூங்கும்வேளை
சோகமாய் இருந்து
அவர்கள் விழிக்க
குதூகலமாய் ஆட்டம் போடுபவை
பொம்மைகள்...
உயிரில்லாவிட்டாலும்
குழந்தைகளின்
உயிருக்கு உயிரானவையே இந்த
அழகான அன்பான மொத் மொத் பொம்மைகள்..