முதியோர் இல்லத்திலிருந்து
கரம்பிடித்தேன்!
கட்டியணைத்தேன்!
கருவை தாங்கினாய்!
கருவறையாய் தாங்கினேன்!
ஈன்றெடுத்தோம்!
உவகை கொண்டோம்!
உச்சி முகர்ந்தோம்!
பாலூட்டினாய்!
தாலாட்டினேன்!
உணவூட்டினோம்!
பெயர் சூட்டினோம்!
கலை கற்றான்!
கல்வி கற்றான்!
பதக்கம் பெற்றான்!
பதவியும் பெற்றான்!
கரம்பிடித்தான்!
கழட்டிவிட்டான்!
கருவை சுமந்த உன்னையும்,
கருவறையாய் சுமந்த என்னையும்!
கழட்டிவிட்டான்!
தலைமுடி நரைத்து,
தளர்ந்த நடையினிலே,
தள்ளாத வயதினிலே - நமக்கு
சொந்தமில்லை!
பந்தமில்லை!
சோறுபோட நாதியுமில்லை!
கண்பார்வை மங்கினாலும்,
கருந்தோல்கள் சுருங்கினாலும்,
கண்ணே! கண்மணியே!
என்னுயிரே! என்னவளே!
என்றும்,
எப்பொழுதும்,
உனக்கு நான்!
எனக்கு நீ மட்டுமே!!!