முதுமை
அடுக்கு மாடி கட்டிடத்தில், கைதியாய்
முடக்கம் - பட்டினத்தில் முதுமை !
கரைசேர்ந்த பிள்ளைகள் அக்கரையில்,
அக்கறையற்ற மாளிகையில் இருவர் -பணக்கார முதுமை!
சுமை இறக்க வழியின்றி - விழி பிதுங்கிய
சுமை தாங்கியாய் என்றும் - ஏழ்மையில் முதுமை!
முதிர்ச்சியின் முகமோ முதுமை?
அயற்சியில் அகமாய் முதுமை!.