புதுமுக பட்டதாரி

🎓 2017-ல் கல்லூரி படிப்பை முடித்த அனைவருக்கும் இதை அர்ப்பணிக்கிறேன் 🎓

படித்து முடித்து விட்டேன்
நானும் பட்டதாரி ஆகிவிட்டேன்..

படிப்பு முடித்து பத்து நாள் ஆவதற்குள்
பாதி உயிர் போய்விட்டதே..

வேலை வேலை என்று அனைத்து
வேளைகளும் நகர்ந்துவிட்டதே..

உறவுகளின் கேள்விகளுக்கு பதில்
சொல்லமுடியலயே..

அடுத்து எவன் கேள்வி கேட்பான் என்ற
எண்ணத்தில் நேரம் போனதே..

பெற்றோர்கள் அமைதியாக இருக்க
மற்றவர்கள் தொல்லை தாங்கவில்லையே..

நேர்காணலுக்கு நான் போனால்
சிபாரிசு தான் கேட்கிறான்..

எல்லாரும் அனுபவம் கேட்டால்
அனுபவமில்லா நாங்கள் எங்கே போவோம்..

நான் படித்த படிப்பை நம்பி தான்
என் குடும்பம் இருக்குதே..

என் திறமைக்கேற்ற வேலையைத் தான்
நான் தேடி அலையறேனே..

கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான்
நிறுவனம் நிறுவனமாக ஏறி இறங்கிறேனே...

தன்னம்பிக்கை தான் இருக்கு
விரைவில் வேலைக்குப் போய்விடுவேனே....

- ஆ.மு.ராஜா

எழுதியவர் : ஆ.மு.ராஜா (18-May-17, 6:39 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 708

மேலே