மே திங்கள் 18

உயிர்கள் உறங்கினாலும் உணர்வுகள் உறங்குவதில்லை...

துப்பாக்கிக் குண்டுகள்
துளைத்துச் செல்ல
உடலில் தசைகள் இல்லை
சல்லடையாய்
குருதிப் பெருக்கோடு
உயிர்கள்...

கருவில் உதிர்ந்தோறும்
கருவாய் இருந்தோறும்
கருணைக்கு இடம் இல்லாது
வதைக்கப்பட்டு
சிதையில்...

சிங்கள வெறியரின்
அதிகாரத்தில்
கொத்துக் கொத்தாக
தமிழினம்
துண்டங்களாய்ச் சிதறி
மரண கோலத்தில்...

கண்ணீரைத்
துடைக்கும் முன்
செந்நீரோடு
கையறுந்து விழுவதும்
ஆன்மாக்களின் அலறலும்
செவிகளைக் கிழித்த
நிமிடங்கள்...

பெண் பூக்களைத்
துகிலுரித்தும்
மார்பகம் அறுத்தும்
இறந்த பிணத்துடன் புணர்ந்தும்
கொடுமை செய்த
காமுகர்கள்
சிங்களப் படைகளின்
ஈனச்செயல்...

உயிரை இழந்து
உறவை இழந்து
தொலைந்து போன உறவுகள்...
உலக வரலாற்றில்
நெஞ்சை உடைத்த
தமிழ் இனத்தின் அழிவு
அழியாத நினைவு...

உயிர்கள் உறங்கினாலும் உணர்வுகள் உறங்குவதில்லை...

எழுதியவர் : இதயம் விஜய் (18-May-17, 6:22 pm)
பார்வை : 83

மேலே