காலச்சுழற்சியில் மனிதன்
அந்த நாள் ஞாபகம் வந்தது
குடிமிவைத்தவரை துரத்தி
குடுமியை வெட்டி விட்டனர்
அந்த நாள் ஞாபகம் வந்தது
குடிமிவைத்த மனிதரை
துரத்திச்சென்று குடுமியை
அறுத்தெறிந்தனர் ஒரு கூட்டத்தார்
இன்று இளஞர்கள் விரும்பி
வளர்ப்பது நீண்ட முடி
கட்டிவைத்த குடுமி
அன்று பொட்டு வைக்காத
மங்கையர் முகம்
காண்பதரிது விதவைகள் நீங்க
இன்று பொட்டு வாய்த்த
மங்கையரமுகம் காண்பது
அரிதாகிவிடும் போல் தோன்றுகிறது
எல்லாம் காலம் செய்யும் மாயம்
பழையன புதியனவாகி
புதியன பழையவை ஆதல் !