வடிவழகே வா

கலித்தளையால் வந்த நேரிசை வெண்கலிப்பா
````````````````````````````````````````````````````````````````````
சிலைபோலும் வடிவழகே! திருமகளே! மரகதமே !
கலையெழிலே! கருவிழியால் கனிவுடனே - அலைரசிக்கும்
அழகியலே! அதிசயமே ! அசரவைக்கும் அபிநயமே !
மழைமுகிலாய் வருகவிங்கே மகிழ்ந்து .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-May-17, 12:50 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 82

மேலே