தீய புலாலுண்ணின் சீயத்தின் வாழ்நாள் சிலவாம் - இன்னிசை இருநூறு 93
ஒருவிகற்ப நேரிசை வெண்பா
தூய விடுத்தாயுள் தேய்த்துத் துயர்தரூஉம்
தீய புலாலுண்ணின் நல்லறிவும் - தேயுமால்
சீயத்தின் வாழ்நாள் சிலவாந்தந் தீனியல்பால்
காயநெடி துய்க்கும் கரி. 93 - அரசஞ் சண்முகனார்
சீயம் – சிங்கம், கரி - யானை
இன்னா செய்யாமை- இன்னிசை இருநூறு,
பொருளுரை:
நல்ல சைவ உணவை விட்டுவிட்டு, ஆயுளைக் குறைக்கக் கூடிய துன்பமும் தீமையும் தரக்கூடிய மாமிச உணவை உண்பதால் நன்மை பயக்கும் அறிவு குறைந்து மூர்க்க குணம் ஏற்படலாகும். அதற்கு உதாரணமாக, பிற விலங்குகளைக் கொன்று மாமிசம் உண்ணும் சிங்கத்தின் வாழ்வு சில வருடங்களே! இலைதளை உண்டு உயிர் வாழும் இயல்பால் நீண்ட காலம் வாழக்கூடிய யானையே சாட்சியாகும்.
அருளல்ல (தி)யாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல். 254 புலான்மறுத்தல்
பொருளுரை:
இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே ஆகும்.