அக்னியாய் துணிந்திடு
அனல் கக்க
ஆயிரம் பேர் உண்டு
அனைத்திட யாருமில்லை-அதை
அணைத்திடவும் முடியவில்லை
அரிய அக்னியாய்
அகன்று எரிந்திட
துணிவு கொள்ளும் மனதிற்கு
துணை தேவையில்லை
தன்னை அறிந்த இதயத்திற்கு
துயரம் என்றும்
தடையே இல்லை
அனல் கக்க
ஆயிரம் பேர் உண்டு
அனைத்திட யாருமில்லை-அதை
அணைத்திடவும் முடியவில்லை
அரிய அக்னியாய்
அகன்று எரிந்திட
துணிவு கொள்ளும் மனதிற்கு
துணை தேவையில்லை
தன்னை அறிந்த இதயத்திற்கு
துயரம் என்றும்
தடையே இல்லை